பக்கம்:துளசி மாடம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 71


மொழியையும் விரும்பி ஆர்வத்தோடு கற்பவர்களின் மனநிலை அப்படிப்பட்டதுதான். அந்தப் புதிய மொழி யில் அவர்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு புதுச் சொல்லும், புதுத் தகவலும் எதிர்பாராமல் வருகிற ஐசுவரியம் அல்லது புதையலாக இன்பம் அளிக்கும். 'வழித்துணை விநாயகர்'- என்ற பெயர் கமலிக்கு மிக மிகப் பிடித்துப் போயிற்று. அதைச் சொல்லிச் சொல்லி வியந்தாள் அவள். சர்மா கூறினார் :

"இந்த ஊர் ஸ்தல வரலாற்றிலே 'மார்க்க சகாய விநாயகர்’னுதான் இருக்கு ஜனங்கள் எல்லாம் வழித் துணை விநாயகர்னு சொல்றா"- -

“பழைய வரலாற்றிலே என்ன பேர் இருந்தாலும் பெருவாரியான மக்கள் வழங்குகிற பெயர்தான் நிலைக் கும். மக்களின் நடை, பாவனை, பேச்சு, மொழியும் விதம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதால்தான் "லிங்விஸ்டிக்ஸ்’ அதாவது மொழியியல் உயிருள்ள சயின்சாக வளர்கிறது. அப்படி முக்கியத்துவம் அளிக்காமல் மொழி யின் ஆரம்பகாலச் சட்ட திட்டங்களிலேயே நகராமல் நின்று கொண்டிருப்பதனால்தான் கிராமர்-அதாவது இலக்கணம் நாளடைவில் ஒரு பழைய காலத்து மியூஸியம் போல் ஆகிவிடுகிறது" என்றாள் கமலி.

இதைக் கேட்டு அந்தபிரெஞ்சு யுவதி இணையற்ற அழகு மட்டுமில்லை ; நிறைய விஷய ஞானமுள்ளவளாக வும் இருக்கிறாள் என்று சர் மாவுக்குத் தோன்றியது, சின்ன வயதிலிருந்தே ரவிக்கும் லிங்விஸ்டிக்ஸிலும்கம்பேரிட்டிவலிங்விஸ்டிக்ஸிலும் ஒரு பைத்தியம் உண்டு என்பது அவருக்கு ஞாபகம் வந்தது.

அவர்கள் சென்ற கார் வீட்டு வாசலில் போய் நின்ற போது நன்றாக விடிந்திருந்தது. கார் வந்து நின்ற ஒசை கேட்டு அக்கம் பக்கத்திலும் எதிர் வரிசை வீடுகளிலும் பலர் வாசலில் வந்து நின்று எட்டிப் பார்த்தார்கள். காமாட்சி மாமி திண்ணையோரமாக வந்து சற்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/73&oldid=579789" இலிருந்து மீள்விக்கப்பட்டது