பக்கம்:துளசி மாடம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 துளசி மாடம்


ஒதுங்கினாற்போல் நின்று கொண்டிருந்ததை வசந்தி கவனித்தாள்.

காரிலிருந்து இறங்கிய ரவியையும் கமலியையும் பார்த்துக் குறும்புத்தன்மாகக் கண்களைச் சிமிட்டிச் சிரித்தபடி 'ரவி கமலியையும்_அழைச்சிண்டு இப்படி இந்தச் செம்மண் கோலத்திலே_வந்து கிழிக்கைப் பார்த்து நின்னுக்கோ! ஆரத்தி சுத்திக் கொட்டிட்றேன்" -என்றாள் வசந்தி. சர்மா காரிலிருந்து இறங்கி நின்று கொண்டிருந்தார்.

வசந்தி வேண்டியபடி ரவியும், கமலியைக் கைப்பற்றி அழைத்து வந்து செம்மண் கோலத்தில் நின்று கொண் டான். வசந்தியும் பார்வதியும் ஆரத்தி எடுத்தார்கள்.

"மங்களம் மங்களம் ஜெயமங்களம் பூரீராமச் சந்திரனுக்கு சுபமங்களம் மாதர்கள் மகிழும் மங்கள ஹாரத்தி கோதையர் மகிழும் கற்பூர ஹாரத்தி தங்கத் தாம்பாளத்தில் பஞ்சவர்ணங்கள் போட்டு நல்முத்துக் கமலத்தில் நவரத்தினங்கள் போட்டு இதை மணாளருக்கு மங்களம் மங்களம் பூரீராமச் சந்திரனுக்கு மங்களம் சுபமங்களம்..." வசந்திக்கு இவ்வளவு இனிமையான குரல் உண்டு என்பதைக் கம்லி அன்றுதான் முதல்முதலாக அறிந்தாள். அதிகாலையின் இதமான ம்ோனத்தைப் பறவைகளின் குர்ல்கள் மெதுவாகக் கலைத்துக் கொண்டிருந்த வேளை வில் அந்த ஆர்த்திப் பாட்டு மிகவும் சுகமாக இருந்தது. கோலத்தையும் பாட்டையும் "லவ்லி லவ்லி என்று பாராட்டினாள் கமலி. -

ஒதுங்கினாற்போல் நின்று கொண்டிருந்த தன் தாய்க்கு அருகே கமலியை அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினான் ரவி. சர்மாவை வணங்கியது போலவே காமாட்சியம்மாளையும் கால்களில் குனிந்து வணங்கி னாள் கமலி. ஆனால் காமாட்சியம்மாள் அவள் வணங்கும்போது சற்றே பயந்தாற் போ ல வு ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/74&oldid=579790" இலிருந்து மீள்விக்கப்பட்டது