பக்கம்:துளசி மாடம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 75


மாடியில் அப்பாவும் பிள்ளையும் தனியே விடப்

பட்டிருந்தனர். சர்மாதான் முதலில் ரவியிடம் பேசினார் :

"இதென்ன பெரிய அரண்மனையா சுத்திப் பார்க்கற துக்கு ? அந்த காலத்து வீடு... அவளோ பெரிய கோடீசு வரன் வீட்டுப் பொண்ணுன்னு வசந்தி சொன்னா..."

"அரண்மனையோ குடிசையோ என் சம்பந்தப் பட்ட எதிலும் அவளுக்கு அக்கறை உண்டு. இந்தியா, இந்தியக் கலாச்சாரம், இந்தியக் கிராமங்கள், கிராமத்து வாழ்க்கை எல்லாத்திலேயும் கமலிக்குக் கொள்ளை ஆசை அப்பா !”

“உங்கம்மாட்ட நான் முழு விவரமும் சொல்லலே... உன்னோட ரெண்டாவது லெட்டரைப் படிச்சுக் காமிச் சேன். படத்தைப் பார்த்தா. யாரு ? தெரிஞ்சவளா ? கூடச் சுத்திப் பார்க்க வராளா'ன்னு கேட்டா, ஆமாம் னேன். அதோட சரி... அப்புறம் மேற்கொண்டு அவளும் கேழ்க்கலை. நானும் சொல்லலை."

"நீங்க சொல்லாததுதான் தப்பு அப்பா ஒரு விஷயத் தைப் பூசி மெழுகறதுங்கறதையே பல நூற்றாண்டு களா நம்ம நாட்டிலே ஒரு கலையா வளர்த்துண்டிருக் கோம். அதனாலேதான் எல்லாத்திலியும் எல்லாக் கெடுதலும் வரது..."

"உங்கம்மாட்ட மட்டும் இல்லேடா ரவி யாருட்ட வுமே நான் எதையும் சொல்லலே. வேணுமாமா, வசந்தி, இவா ரெண்டு பேருக்குத்தான் ஏற்கனவே எல்லாம் தெரியும். இப்போ புதுசா எனக்குத் தெரியும்."

"இது மாதிரி ஊர்லே, ஒரு விஷயத்தை நேராக அறிவிப்பதைவிட வேற எதுவும் செய்யறதிலே பிரயோ ஜனமில்லேப்பா. அறிவிக்கிறதைவிட அநுமானத்துக்கு விடறதுதான் அபாயகரமானது." .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/77&oldid=579793" இலிருந்து மீள்விக்கப்பட்டது