பக்கம்:துளசி மாடம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 77


மாதிரி நாலு நாள் கலியாணம் நடத்திச் சந்தோஷப் படட்டுமே ? அவளுக்கும் இந்தியக் கல்யாணச் சடங்கு கள்னா ரொம்பப் பிரியம்..."

போடா போ ! நான் என்னத்தையோ சொன்னா நீ என்னத்தையோ பதில் சொல்றே ! வீட்டுக்கு அடங்கின. மருமகளாகத் தனக்கு அ ட ங் கி ன கிராமாந்தரத்து மாட்டுப் பெண் ஒண்னு வரணும்கறது காமுவோட

பேப்பர்-என்ற கரகரத்த குரலுடன் தெருத் திண்ணையில் காலைத் தினசரி வந்து விழுகிற சத்தம் கேட்டது. ரவியே படியிறங்கிப் போய்ப் பேப்பரை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து, "நீங்க பேப்பரைப் பார்த்திண்டிருங்கோ அப்பா ! நான் போய் அம்மாட்டப் பேச்சுக் குடுத்துப் பார்க்கறேன்" என்று வீ ட் டு க் கூடத்துக்குப் போனான். -

ரவிக்கும் அம்மாவைப் பார்க்கக் கொஞ்சம் தயக்க மாகத்தான் இருந்தது.

அவன் போனபோது அம்மா சமையலறையிலே இல்லை. கொல்லைப்பக்கம் அவள் குரல் கேட்டது. அம்மாவின் குரலுக்கு வசந்தி ஏதோ பதில் சொல்லு வதும் அவன் காதில் விழுந்தது.

உடனே ரவி கொல்லைப் பக்கம் விரைந்தான். அம்மா எதிரே வந்தாள், ஆனால், அவனைப் பார்க்கா தது போல விடுவிடுவென்று நடந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு சமையல் கட்டுக்குள் புகுந்து கொண்டாள். வசந்திக்கும் அம்மாவுக்கும் என்ன உரையாடல் நடந் திருக்கும் என்றறியும் ஆவலில் ரவி முதலில் கிணற்ற டிக்கே சென்றான். துளசி மாடம் இருந்த இடத்தின் அருகே சிறிது தொலைவு விலகினாற்போல நின்று கமலிக்கு அதைச் சுட்டிக் காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள் வசந்தி. கமலி ஆர்வமாகக் கேட்டுக் கொண்டு நின்றாள். பார்வதியும் பக்கத்தில் இருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/79&oldid=579795" இலிருந்து மீள்விக்கப்பட்டது