பக்கம்:துளசி மாடம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 துளசி மாடம்


"இப்ப வேண்டாம்...மறுபடியும் நானே சொல்லி அனுப்பறேனே...?" என்று அவனுக்குப் பூசி மெழுகி னாற் போலப் பதில் சொல்லி மறுத்துவிட்டார்.

புதன் கிழமை காலையில் பத்திரிகை போடும் பாது, நாளன்னிக்கு வெள்ளிக் கிழமை காலம்பர ஒரு விளம்பரம் தரேன். அதைப் பேப்பருக்கு அனுப்பிடணும். என்ன பணம் ஆறதுன்னு கணக்குப் பார்த்துச் சொன்னா அதுக்கும் கூடவே செக் எழுதித் தந்துடறேன்...' என்று கூறியிருந்தவர் வெள்ளிக் கிழமை அந்த எண்ணத்தை உடனே கைவிடும்படி அப்படி என்ன ஆயிற்றென்று புரியவில்லை.

தனக்குக் கிடைக்க இருந்த விளம்பரக் கமிஷன் போய் விட்டதே என்று ஏஜெண்டுக்கு வருத்தம். அந்த அரிலும், அக்கம் பக்கத்து ஊர்களிலுமாக இப்படி ஏதாவது பத்துப் பன்னிரண்டு விளம்பரங்களை வாங்கி அனுப்புவதன் மூலம் பத்திரிகைகளின் விற்பனைக் கமிஷன் தவிர விளம்பரக் கமிஷனாகவும் அவனுக்கு ஏதாவது கிடைக்கும். ஏஜெண்டைப் பொறுத்தவரை அந்த மாத விளம்பரங்களில் ஒன்று இப்போது போய் விட்டது. நஷ்டம்தான்.

"ஐரோப்பிய நகரம் ஒன்றில் சில ஆண்டுகள் வசித்து விட்டுத் தாயகம் திரும்பும் மேற்படிப்பும் உயர்கல்வித் தகுதியும் உள்ள முப்பத்திரண்டு வயது மணமகனுக்கு மணமகள் தேவை. கெளசிக கோத்திரம் அல்லாத கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் எழுதவும். மணமகள் அழகாகவும் இலட்சணமாகவும் குடும்பப் பாங்காகவும் அடக்கமாகவும் இருக்க வேண்டும். பி.ஏ. வரை படித் திருந்தால் நல்லது. குறைந்த பட்சம் எஸ். எஸ். எல் சி யாவது பாஸ் செய்திருக்க வேண்டும். புகைப்படம் முதலிய விவரத்தோடு ஜாதகமும் அனுப்ப வேண்டும்”என்னும் பொருள்ப்ட ஆங்கிலத்தில் தயாரிக்கப் Hட்டிருந்த அந்தச் சிறிய விளம்பரம் வேணு மாமாவின் ஆலோ ச ைன யோ டு தயாரிக்கப்பட்டவுடனேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/8&oldid=579721" இலிருந்து மீள்விக்கப்பட்டது