பக்கம்:துளசி மாடம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 துளசி மாடம்


"என் வாழ்க்கை எனக்குச் சொந்தமானது அப்பா: அதை இந்த ஊரின் முந்நூறு திண்ணைகளிலும் மூன்று தெருக்களிலும் யாரும் தீர்மானித்துவிட முடியாது.”

சரி! நீ குளிச்சுட்டு வா...வயித்திலே வெறுங் காப்பி யோட எவ்வளவு நாழி பசி தாங்கும்? இதெல்லாம் இப்போ பேசி முடிவு காணற விஷயம் இல்லே...அவளை யும் குளிக்கச் சொல்லு. சாப்பாடு-பழக்கம் எப்படி? நம்ம சாப்பாடு ஒத்துக்குமோ இல்லையோ?"

'தாராளமா...இங்கே என்ன கிடைக்குமோ, அதைக் கமலி சாப்பிட்டுப்பா. நமக்கும் அவாளுக்கும் அதுதான் பெரிய வித்தியாசம் அப்பா. எங்கே எப்படி இருக்கனுமோ, அப்பிடி இருக்க அவாளாலே முடியும். "எங்கேயும் இப்பிடித்தான் இருப்பேன்-இப்பிடித்தான் இருக்க முடியும்-இதுதான் பிடிக்கும்’னு முரண்டு பண்ற தெல்லாம் நம்ம ஜனங்க கிட்டத்தான் அதிகம்..."

'ஒரேடியா அப்பிடிச் சொல்லிட {LԲԼդ-ԱսfT Յ:1சில துலே முரண்டும் வேண்டியதாத்தான் இருக்கு..."

தேவையானதுலே முரண்டு இருக்கிறதில்லே. தேவை யில்லாததுலே எல்லாம் நம்மகிட்ட முரண்டு இருக்கு." அப்பாவுக்குப் பதில் சொல்லிக் கொண்டேபெட்டிகளை எடுத்துப் பிரித்தான் ரவி.

'நல்ல ரிஸ்ட் வாட்ச் வேணும்னு பாரு, குமார் ரெண்டுபேருமே தனித் தனியா எனக்கு லெட்டர் போட்டிருந்தா. அவா லெட்டர் போட்டு ஏழெட்டு மாசமாச்சு. எனக்கு மறந்தே போச்சு, கமலிதான் ஞாபகப்படுத்தினா...அவ சொல்லலேன்னா மறந்தே போயிருக்கும்"-என்று சொல்லிக் கொண்டே இரண்டு அழகான சிறிய அட்டைப்பெட்டிகளை எடுத்து

நீட்டினான் ரவி. -

சர்மா அதை வாங்கிப் பார்த்துவிட்டு 'நன்னாத் தான் இருக்கு அவளை விட்டே குழந்தைகள் கிட்டக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/86&oldid=579802" இலிருந்து மீள்விக்கப்பட்டது