பக்கம்:துளசி மாடம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 துளசி மாடம்


காலைப் பூஜை என்பது ஆந்த வீட்டில் முக்கிய மானது. சுமார் முக்கால் மணியிலிருந்து ஒரு மணி நேரம் வரை பிடிக்கும். காமாட்சி அம்மாள் சம்பிராணி திரயக்காலில் உருகிய பொன்னாய் மின்னும் நெருப்பை எடுத்துக்கொண்டு வந்து வைத்தாள்._ பார்வதி குளித்து உன்ட்மாற்றிக்கொண்டு தோட்டத்திலிருந்து பூஜைக்கு, வேண்டிய பூக்களைக் கொய்து கொண்டு வ்ந்து வைததாள்.

“பாரு! அண்ணா குளிச்சிருந்தான்னாக் கீழே வரச் சொல்லும்மா!" என்று பார்வதியிடம் பூஜையின் நடுவே சொல்லியனுப்பினார் அவர். பார்வதி மாடிக்குப் போனாள். காமாட்சி அம்மாள் சர்மாவைக் கடிந்து கொண்டாள். -

"அவனை ஏன் சிரமப்படுத்தறேள்? ரயில்லே அலுத்துக் களைச்சுப் போய் வந்திருக்கான்...மெல்ல வரட்டுமே?” .

“ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கான். பூஜைக்கு வரட்டுமே!"

காமாட்சியம்மாள் நைவேத்தியத்தை மூடி எடுத்துக் கொண்டு வருவதற்காக உள்ளே போயிருந்தாள். ரவியும் கமலியும் அவர்களை அழைக்கப் போயிருந்த பார்வதியும் மாடியிலிருந்து வந்தார்கள்.

ரவி நாலு முழம் வேஷ்டியும் மேலே சட்டையோ பனியனோ போடாமல் ஒர் அங்கவஸ்திரமும் அணிந் திருந்தான். பழைய காலத்துச் சுங்குடிப் புடவை டிசைனில் ஆனால் புதிய நவநாகரிக மஞ்சள் நிற வாயிலில் நீலப் புள்ளிகள் இட்ட மெல்லிய புடவை ஒன்றை அணிந்திருந்தாள் கமலி. நெற்றியில் குங்குமத் திலகம், ஷாம்பு போட்டு நீராடியதால் புஸாபுஸ்" வென்று கூந்தல். மேலே பொன் நிறத்தில் தோள் பட்டையோடு துடிகிற கையில்லாத ரவிக்"கை அணிந்: திருந்தாள். உடலை இறுக்கினாற் போலத் தைக்கப் பட்டிருந்த அந்த ரவிக் கையும் அவளுடைய செழிப்பான மேனி நிறத்தையும் கூர்ந்து கவனித்துத் தான் பிரித்தறிய வேண்டியிருந்தது. அந்த உடையில் அந்த வேளையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/88&oldid=579804" இலிருந்து மீள்விக்கப்பட்டது