பக்கம்:துளசி மாடம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 87


நறுமணங்களின் உருவகமாய் ஒரு நளினமான கவிதை யாய் பூஜை அறைக்கு முன் வந்து நின்றாள் கமலி.

அவள் முதலிலேயே குளித்துவிட்டு வந்ததால் அவளை டிரஸ் செய்து கொள்ள விட்டு விட்டு ரவி குளியலறைக்குள் போயிருந்தான். அவள் பின் தங்க விட்டுச் சென்ற மனத்தை மயக்கும் நறுமணங்கள் குளிய லறையை முழுமையாக நிறைத்துக் கொண்டிருந்தன. அவள் உபயோகித்திருந்த ஷாம்பு. சோப்பு துவட்டிக் கொண்டு போட்டிருந்த டர்க்கி டவல் எல்லாமாகச் சேர்ந்து-காலை வரையில் சுண்ணாம்பு சிமெண்ட் வாடை மட்டுமே நிரம்பியிருந்த புதிதாகக் கட்டப்பட்ட அந்தக் குளியலறையை இப்போது நறுமணங்கள் நிறைந்த கந்தர்வ லோகமாக்கியிருந்தன. -

அவன் நீராடிவிட்டு வெளியே வந்தபோது கமலி ஏறக்குறைய டிரஸ் செய்து முடித்திருந்தாள். அவள் *ரவிக்"கை அணிந்திருந்ததை அவன் அப்போதுதான் கவனித்தான். சொல்லி வேறு ஏதாவது கையுள்ள ரவிக்கையை மாற்றிக் கொள்ள வைக்கலாமா என்று ஒரு கணம் யோசித்தான். அது கமலியின் சுதந்திரத்தில் தலையிட்டுத் தான் அநாவசியமாக அவள் மேல் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்குமோ என்று தோன்றியது. செல்வச் செழிப்பில் கவலையில்லாமல் வளர்ந்த அந்தப் பெண் தன்னைக் காதலித்துத் தன்னோடு புறப்பட்டு இந்தியாவுக்கு வந்திருக்கிறாள் என்பதற்காகவே அவளை ஒவ்வொன்றிலும் வலித்து நிர்ப்பந்தப்படுத்த அவன் தயாராயில்லை, அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் சொல்வதையெல்லாம் ஏனென்று விசாரிக்காமல்கூட உடனே கடைப்பிடிக்க அவள் தயாராயிருந்தும் அவன் அதைச் சொல்லத் தயங்கினான். ஐரோப்பிய வாழ்க்கை யின் தனி நாகரிகம் அதை அவனுக்குக் கற்றுக் கொடுத் திருந்தது. அதே சமயத்தில் சங்கரமங்கலம் போன்ற ஓர் இரண்டுங்கெட்டான் ஊரில் சுவர்ண விக்கிரகம் போன்ற ஒர் இளம்பெண் செழித்த தோள்கள் தெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/89&oldid=579805" இலிருந்து மீள்விக்கப்பட்டது