பக்கம்:துளசி மாடம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 துளசி மாடம்


'மாமாவும் மாமியும் இங்கே சாப்பிடட்டும். நீ, கமலி, பார்வதி, குமார் எல்லாருமே நிதானமாகச் சிரிச்சுப் பேசிண்டு ம்ாடியிலேயே சாப்பிடலாம். நான் கூட இன்னிக்கு இங்கேயே விருந்து சாப்பிடப் போகிறேன். பெரியவர்ண்ள்ச் சிரமப் படுத்த வேண்டாம், நாம் எல்லோரும் மாடியிலேயே சாப்பிடுவோம்" என்று நிலைம்ையை நாசூக்காகச் சமாளித்தாள் வசந்தி. சர்மா வுக்கும் நிலைமை புரிந்தது. அவர் இதற்கு ஆட்சேபணை எதுவும் சொல்லவில்லை.

"வசந்தி சொல்றதும் சரிதான். அப்படியே நடக் கட்டும்" என்று சொல்வதைத் தவிரச் சர்மாவாலும் அப்போது வேறெந்த முடிவுக்கும் வர இயலவில்லை. ரவி கமலியை அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான்.

வசந்தியும், குமாரும், பார்வதியும் மாடிக்குச் சமைய லறையிலிருந்து பண்டங்களை எடுத்துச் செல்லும் முயற்சி யில் ஈடுபட்டார்கள். அவர்கள் மாடிக்கு வருகிறவரை கிடைத்த தனிமையில் கமலியிடம் ரவி இரண்டொரு. விஷயங்களைச் சொல்ல முடிந்தது. கைக்கடியாரங்களை யும் வேறு அன்பளிப்புப் பண்டங்களையும் கமலியே அவள் கைப்படக் குமாரிடமும், பார்வதியிடமும் கொடுக்க வேண்டும் என்பதைச் சொன்னான். நேரடியாக அம்மா வின் முரண்பாடுகளைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல் லாமல், எது நடந்தாலும் ஈஸியா எடுத்துக்கணும் கமலி: பழைமையான முரண்டுகள் உள்ள கிராமம். பழைய முரண்டு பிடித்த மனிதர்கள். நாகரிகம், மேனர்ஸ் எல்லாம் அதிகம் எதிர்பார்க்க முடியாது" என்றான்.

"நீங்க இப்படித் தனியா எடுத்துச் சொல்லி என்னிடம் வேண்டுகோள் விடுக்கிறதுதான் அன்ஈஸியா இருக்கு" என்று சிரித்தபடியே மறுமொழி கூறினாள் கமலி.

கமலி தானும் பரிமாறுவதில் உதவிக்கு வருவதாக முன் வந்து இரண்டு பெரிய அப்பளங்களைக் கீழே போட்டு உடைத்த பின் 'நீ பேசாமல் உட்கார்ந்து சாப்பிடு கமலி. பழகினப்புறம் பரிமாறலாம்' என்று:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/92&oldid=579808" இலிருந்து மீள்விக்கப்பட்டது