பக்கம்:துளசி மாடம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 93


வேனுமா...?" என்று மாமியே வசந்தி வருவதைக் கண்டு எழுந்திருந்து உட்கார்ந்து விட்டாள்.

பாதி அயர்ந்த அந்தத் தோற்றத்திலும் கூடக் காமாட்சியம்மாள் ஏதோ கோவில் கர்ப்பக்கிருகத்திலி ருந்து ஓர் அம்மன் விக்ரகம் உயிருடனும் உருவுடனும் புறப்பட்டு வந்து அமர்ந்திருந்தது போல் இலட்சணமா யிருந்தாள். "இந்த வீட்டின் கிருகலட்சுமி நான் இதன் அன்னபூரணி நான்' என்ற கம்பீரமான செருக்குடன் அழகும், தவ ஒளியும் குன்றாத ஒரு ரிஷிபத்தினிபோல் அப்போது அங்கு அமர்ந்திருந்தாள் காமாட்சியம்மாள்!

மாமி நிர்த்தாட்சண்யமாக மறுத்துவிடுவாளோ என்ற பயத்தோடும் தயக்கத்தோடும்தான் வசந்தி வத்திருந்தாள்.

"நம்ம பூர்வீகக் கலைகள், பாட்டுக்கள், விளையாட்டுக்கள், பழக்க வழக்கங்கள், எல்லாத்திலிம்ே கமலிக்குக் கொள்ளை ஆசை...நீங்க கொஞ்சம் சிரமத் தைப் பாராமே வந்து அவளுக்கு அம்மானை ஆடிக் காமிக்கனும் மா.மீ ! நானே டிரை' பண்ணினேன்... எனக்கு நன்னா ஆட வரலை.பழக்கம் விட்டுப் போச்சு..."

"மொட்டைக் கழுத்தும் மூளித் தோளுமாக் கையில் லாமே ஒரு ரவிக்கையைப் போட்டுண்டிருக்காளேடி "

'நீங்க அதைத் தப்புன்னு நெனைக்கிறதாத் தெரிஞ்சா அடுத்த நிமிஷமே கழட்டிட்டு வேறேபோட்டுண்டுடுவா... கமலிக்கு உங்ககிட்ட அத்தனை மரியாதை...அத்தனை பயபக்தி..."

“மரியாதையும், பயமும், பக்தியும் வெச்சுக்க நான் யாருடி அவளுக்கு ? இங்கே வந்து தங்கியிருக்கிறதாலே சொல்ல வேண்டியிருக்கு. மடத்து முத்திராதிகாரி வீட்டிலே உடம்பிலே துணியே இல்லாமே ஒரு வெள்ளைக்காரி வந்து தங்கியிருக்காளாம்னு ஊர்லே நாலு பேர் எங்களைப் பற்றிப் பேசாமப் பார்த்துக் கனுமோல்லியோ !”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/95&oldid=579811" இலிருந்து மீள்விக்கப்பட்டது