பக்கம்:துளசி மாடம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 துளசி மாடம்


மதிப்பதுதான் அதை வெல்லும் மிகச் சிறந்த வழி என்பதைப் புரிந்து கொண்டிருக்கும் கமலியின் மென்மைஇங்கிதம் - இன்யபு - யாவும் வசந்தியைச் சிந்திக்க வைத்தன. ம்ெய்யான் கல்வி அல்லது மனப்பக்குவம், ஒர் அழகிய பெண்ணை இரட்டை மடங்கு மேலும் அழ்கி யாக்கி விடுவதை உணர்ந்தாள் வசந்தி.

அம்மானைக் காய்களையும் எடுத்துக் கொண்டு கமலியும், வசந்தியும் கீழே வந்தபோது நேரம் நடுப் பகலுக்கு மேல் ஆகியிருந்தது. அம்மாவின் பாட்டு, அம்மானை விளையாட்டு எதுவும் புதுமை இல்லை யென்றாலும், கமலி காமிராவையும் ரெக்கார்டையும் எடுத்து வந்திருப்பதைக் கண்டு அவற்றினால் ஆவல் துரண்டப் பெற்றவர்களாகப் பார்வதியும் குமாரும்கூட வந்து வேடிக்கை பார்க்க நிற்பவர்களைப் போலச் ஆழ்ந்து கொண்டு நின்றார்கள்.

காமாட்சியம்மாள் சிறிதும் பதறவோ பயப்படவோ இல்லை. அலட்சியமாக அமர்ந்து அம்மானைக் காய் களை ஆடினாள். முதலில் மூன்று காய்களை ஆடிக் காட்டியபின் விரைவு குன்றாமல், ஐந்து காய்களையும் ஆடினாள். இனிமையான ஒரு சிறிதும் பிசிறு தட்டாத கணிரென்ற குரலில், தான் பிறந்த ஊரில் சிறுவயதில் பாடிப் பழகிய ஓர் அழகிய பாடடையும் அம்மானைக்கு இசைவாகப் பாடினாள் மாமி.

'இள நகை யரும்பு மிதழ்க்கடை எழிலுறு தவள நகைப்படை வளமது கொண்டு சிவன்தன

துளமதில் உறுதி தகர்த்திடு களபகுங்கும கலச கொங்கையிற்

கலாம் விளைவிப்பவட் கம்மானை துளவ நாயகன் சோ தரிக் கம்மானை

மகர தோரண வீதியெங்கணும் பளபளக்கு மொகுவிலாச நற் -

பவளவல்லி திருவிளங்கு மம்மானை ! அநாயாசமாக இந்தப் பாட்டைப் பாடும்போது: மாமி தன் எதிரே சிலர் கேட்கிறார்கள் அல்லது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துளசி_மாடம்.pdf/98&oldid=579814" இலிருந்து மீள்விக்கப்பட்டது