பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
13

— 13—

இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்

கண்திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்து

கடியுட்ை வியன்நகர் அவ்வே, அவ்வே

பகைவர்க் குத்திக் கோடுதுதி சிதைந்து

கொல்துறைக் குற்றில !

என்று பாடியருளினர். இதன் உள்பொருள், " உன் போர்க் கருவிகள் போர் முனே காணுமல் உன் அரண் மனையில் கிடக்கின்றன. அதிகனது படைக்கலங்கள் போர்முனே கண்டு நன்கு பழகி வெற்றி மாலை குடிச் சிதைந்து கிடக்கின்றன. இத்தகைய படையினையுடைய அதிகமானுடன் நீ பகைகொண்டு போர் தொடுத்துப் பயனில்லை. வெற்றி அவனுக்கே அன்றி உனக்குக் கிட்டாது ' என்பதாம்.

இளந்திரையன் நுண்ணறிவினன் ஆதலின், ஒளவையாரின் அமுதவாக்கின் உள்பொருளை உணர்ந்து அதிகனேடு அமர் புரிய இருக்த எண்ணத்தை விட் டொழித்தான். ஒளவையாரும் இளந்திரையனிடம் விடைபெற்று அதிகனே அடைந்தனர். தாம் தாது சென்று மீண்ட வரையில் கிகழ்ந்த யாவற்றையும் கூறினர். அதிகனும் மகிழ்ந்தனன். போரும் கின்றது. அறிஞர் முனைந்தால் ஆகாததும் உண்டோ ?

جستایجیتمیستحصاحد است حسیمعیت تحصحبه 急