பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
30

னன். இராவணன் அரண்மனையினையும் அடைக் தனன்.

இராவணன் அவையில் வீற்றிருந்த தோற் றத்தைக் கண்ட அங்கதன் பலவாறு அவனைப்பற்றி எண்ணவும் தொடங்கினன். ' ஆ | என்ன கம்பீர மான தோற்றம் இவனேக் கொல்ல ஒர் இயமன்கூட இருக்க முடியுமா ? ஆ என்ன மடமை எனக்கு 1:இவ னைக் கொல்ல இராமன் கை அம்பு உண்டல்லவா இதனை அறியாது இவ்வாறு கூறி விட்டனனே ?” என்று தன் மனத்துக்குள் ஒன்றுக்கொன்று ஒவ்வாத, முறையில் பலவாறு எண்ணினன்.

இவ்வாறு பலவாறு எண்ணிய அங்கதன், கடுமை யான கனலும் விடமும் இயமனது கொடுமையும் ஒன்று சேர்ந்து, கைகள் பெற்று, ஒளியுடைய முடி. புனேந்து கருங்கடல் உருக்கொண்டு வீற்றிருந்தால் போல் வீற்றிருந்த இராவணன் அவையினை நெருங்கினன்.

தன் எதிரே சிறிதும் அஞ்சாது வந்து கிற்கும் அங்கதனேக் கண்ட தசக்கிரீவன் கண்களில் தீப்பொரி பறக்கக் கோபக் குறியுடன், அடே நீ யாவன்? இங்கு நீ வந்த காரணம் யாது? இங்குள்ளவர் உன்னைக் கொன்று புசிப்பதற்கு முன்பு நீ வந்த காரணத்தை விரைவில் கூறுக '

இந்த வெஞ்சின மொழிகளைக் கேட்டு வாலி அமைந்தன் சிறிதும் வெருக்கொண்டிலன். விலாப்

என்று அதட்டிக் கேட்டனன்.