பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
39

—39–

செம்மை யாளரைச் சீறியே

அணங்குசெய் தீய்ோர் தம்மில் ஆற்றரும் பழிசுமந்து

ஒல்லையில் தமரோடு இம்மை விடுவர் எழுமையும் துயரினூடு இருப்பார் "இதனை நீ அறியாதது என்னே ! நீ பெற்ற ஆயிரத் கெட்டு அண்ட அரசும், அழியா வச்சிர தேகமும் மீண்ட ஆயுளும் மற்றுள்ள சகலபோகமும் அழிவுரு

மல் இருக்க, நீ விரும்பில்ை அவர் கூறியனுப்பியபடி தேவர்களைச் சிறை நீக்குக. பிழைக்க. முருகப் பெருமா

ளிைன் வன்மையினே நீ, முன்பே அறிந்துள்ளாய். அன்னர் திருக்கை வேல்உனது இளவலான தாரகனது மார்பையும் கிரெளஞ்ச கிரியையும் பிளந்த வன்மை மிக்கது. அஃது உன் மார்பைப் பிளத்தல் அரிதன்று. எளிதே. என்ருலும்) சாம பேத தான தண்டமாகிய அரச முறைப்படி உன்மாட்டு வைத்த கருணையில்ை திருச்செந்துாரில் இதுபோது வந்து தங்கி யுள்ள குமாரக் கடவுள் உன்பால் என்னேத் தாது விடுத்த னன், ஆகவே, நன்கு சிக்கித்து உனது கருத்தினே வெளிப்படுத்துக.' என்று கயமும் பயமும் கலந்த மொழிகளைக் கழறினர்.

இங்ங்னம் வீரவாகு கூறக் கேட்ட சூரனது கண் களில் தீப்பொறிபறந்தன.சினத்தால் கைகளைத்தட்டி,