பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
58

—58–

வாழவும் ஒருப்படான். உங்களோடு போரிடவே துணிந்துள்ளான். ஆகவே, நீயும் கின் இளைஞரும் உமக்குரிய தாயபாகத்தை மறந்திடுங்கள். பழையபடி தவமேற் கொள்ளுங்கள். இத்தவம் உங்களுக்கு என்றும் அழியாப் பேர் இன்ப உலகில் கொண்டு சேர்க் கும். துரியன் முதலியோர் துர் ஆசையுடையவர். சிறிதும் உள்ளத்தே அன்பில்லாதவர். என்ன கூறினும் கேளாத அசடர். உனக்கு யான் கூறுவது என்னை எனில், நீ மண்ணுசையை மறந்திடு. அரச பதவியில் ஆசை கொள்ளாதே போர் ஆசை உனக்குப் பொருத்தம் அற்றது. சீரும் சிறப்பும் பெறும் ஆசையையும் விட்டொழி. இவையே யான் உனக்குச் சொல்லக்கூடியவை '’ என்று கூறினர்.

இங்ங்ணம் சஞ்சய முனிவர் கூறக்கேட்ட சினம் கொள்ளாத தருமரும் சிறிது சினங்கொண்டனர். தாம் சினங்கொண்ட குறிப்பைச் சில மொழிகள் பேசியும், வெளிப்படுத்தினர். முனிவரை கோக்கி ' முனி சிரேஷ்டரே. அரசர்கள் தம் அரசகடனை ஆற்ருது அடவி புகுந்து அருந்தவம் புரியும் கடமை கடமையாமோ ? அரசபதவியில் வாழ்வாங்கு வாழ்ந்த பின்பன்ருே காடு புகுந்து கடுந்தவம் புரிந்து கடவுளடி பற்றுதல் வேண்டும் ? அரசர்கள் தம் பகைவரை ஒழித்து காட்டில் அமைதியினை நிலை கிறுத்திய பின்பே தாம் கல்வழி காடுதற்கான அறங்களைச் செய்ய