பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
63

உரிமை பெறத் துரியனிடம் தூதாகக் கண்ணன. அனுப்புவதென ஐவரும் முடிவு செய்தனர். அவ்வாறே கிருட்டினும் துரியன்பால் தாது செல்லப் புறப்

பட்டனன்.

கண்ணன் துரியோததிையர்பால் தாது போவ தற்கு முன் தருமர் தம்பிமார்களுடன் கிருட்டினனையும் உடன் வைத்து ஓர் ஆலோசனைக் கூட்டம் கடத்தினர். அதுபோது, கிருட்டினன் அக் கூட்டத்தின் தலைவகை இருந்து ஐவருடைய கருத்துக்களையும் கூறுமாறு கேட்டான். அவ்வாறே ஒவ்வொருவரும் தம் தம் கருத்துக்களைக் கூறத் தொடங்கினர்.

' கண்ணு துரியதிையர் போர் வேண்டும் என்று சஞ்சய முனிவரிடம் கூறி அனுப்பினாலும், நாம் அரசதிே தவறி உடனே போருக்கு ஆயத்தம் ஆதல் கூடாது. இது மன்னர் கடமையாகாது. பனிக் என்னும் நெருப்பை மிகவும் மூட்டி, வளர்த்தால் அமரில் இரு பக்கத்தினரும் இறக்கவே கேரிடும். ஒரே குளத்தில் தாமரை மலரும், கழுர்ே மலரும் வளர்ந்து, பூத்து விளங்குவதுபோல, கெளரவ பாண்டர்ைன் ளாகிய எங்கள் இருவர் குலமும் ஒருசேர ஒற்றுமை யாக வாழ்வு கடத்துவதேமுறை. ஆகவே, அரவக்கொடி. யோனிடம் சமாதான மொழிகளே சாற்றி வருக. துரோணர் முதலிய ஆசிரியர்களையும் வீடுமர் முதலிய பெரியோர்களையும் மற்றும் துணைவர்களாக உள்ள