பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
75

—75–

கொல்வதே முடிந்த முடிபு." என்று மொழிந்தனன். நீதிமுறை அறிந்த விகர்னன்.

" மூத்தவர் இளையேrt வேதமுனிவரt பிணியின் மிக்கோர் தோத்திரம் மொழிவோர் மாதர்

தூதர்என் வரைக் கொல்லின் பார்த்திபர் தமக்கு வேறு பாவமற்

றிதனின் இல்லை

பூத்தெரி தொடையாய் பின்னும்

நரகினும் புகுவர் ' என்ருன்

இவ்வாறு விகர்னன் கூறக்கேட்ட சதிகாரர்கள் இறுதியில் ' துாதனைக் கொல்லவது முறை அன்று. ஆளுல், சிறைப்படுத்தல் ஒழுங்கு ' என்ற முடிவு செய்து, அதன்பொருட்டு நில அறை ஒன்று அமைத்து அதன்மீது விரிப்பு விரித்துக் கீழே கில அறை உண் டென்று அறியாவாறு செய்து, மேலே தவிசு இட்டுக் கண்ணனே அதன்மீது அமரச்செய்து, அங்ங்னம் அமர்ந்ததும் அத் தவிசு சில அறையில் புகுமாறு செய்து அங்கு முன்பே இருக்கவைத்த மல்லரைக் கொண்டு மாயனப் பிணித்து விலங்கிட்டுச் சிறை செய்தல், என்று முடிவு கட்டினர். மீண்டும் கண்ணனை வந்தபோது அப்பொய்த் தவசில் அமரு மாறு கூறினர். எல்லாம் அறிந்த கண்ணன் அத்