பக்கம்:தூத சென்ற தூயர்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
82

அடுத்துவந்து.ஏற்குநர்க்கு ஆர்வம் மீதுரக் கொடுக்கில் ஒன்றே பல கோடி ஆகுமால்

அதாவது பெருஞ் செல்வத்தை இறைவர் கொடுத் திருப்பது, உலகில் புண்ணியமாகிய பேற்றைப் பெறு வதற்கே ஆகும். ஆகவே, வறுமையால் வாடிவந்து கெஞ்சிக் கேட்பவர்கட்கு அன்புடன் உதவினால், ஒன்று பலவாக மேலும் பெருகும் ' என்பதாம்.

இவ்வாறெல்லாம் எண்ணி ' தேவர்காள், என் தொல்குலம் செய்த தவம் காரணமாக உம்மைக் கண்டேன். நீர் என்னிடம் விரும்புவது யாதோ அறி யேன். அதனைக் கூறினால் மருமல் செய்கின்றனன் என்று உறுதி கூறினன். உடனே இந்திரன் நளன. நோக்கி ' ஐய, களனே t எங்கள் பொருட்டுத் தமயந்தியிடம் சென்று எங்கள் ல்வருள் ஒருவருக்கு மணமாலே குட்டுமாறு தமயந்தியிடம் சொல்லவேண் டும் ' என்றனன். இவ்வாறு கூறியதும், களனுக்குத் தன் எண்ணத்தில் இடி விழுந்ததுபோல் இருந்தது. என்ருலும், தான் எது கூறிலுைம் செய்து முடிப்பதாக வாக்குத் தந்தமையின் அதனை மறுத்தற்கு அஞ்சி அவ்வாறே செய்வதாகக் கூறினன்.

களனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. அதாவது ஒர் ஆண் மகன் மாதர்கள் வாழும் அந்தப்புரம் சென்று எப்படி மீள்வது என்பதே அவ்வையம் ஆகும். ஆகவே,