பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#, து சன் சஆத்தே பேக்கன் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. ஆப்பத்தைவிட வேறு என்னவேன். அவனுக்கு இன்பம் கொடுத்தது. "சொங்கிப்பா, தினமும் இப்படி எனக்காக வேலை செய்கிருயே, இந்த ஆப்பம்-இன்றைக்காவது ஒன்று சர்ப்பிடு' என்பதன் சாமாத்தாள். சொங்கப்பன் முகத்திலே ஓர் அசட்டுச் சிரிப்பு வழி யும். அவ்வளவுதான், அடுத்த நொடியிலே அவனேக் காண முடியாது. - டேய், நீ ஆப்பம் சாப்பிடாவிட்டால் இனிமேல் என் கூடையைத் தொடப்படாது" என்றுகூடக் கிழவி மிரட்டிப் பார்த்தான். பவிக்கவில்லை. ஆப்பத்துக்காக அவன் வேலே செய்யவில்லை என்று தெளிவாகத் தெரிந்து போய்விட்டது. கிழவி காசு கொடுத்துப் பார்த்தான். "வெற்றிலே பரக்காவது போட்டுக்கோ' என்று சொல்லிப் பார்த் தான். ஒன்றையும் அவன் ஏற்றுக்கொள்ளவில்லை. அவள் பொக்கை வாயிலிருந்து இப்படி வரும் வார்த்தை களே அவனுக்கு எல்லா இன்பத்தையும் கொடுத்து விட்டனவோ என்னவோ? அந்த வார்த்தைகனை மட்டும் கேட்டுக்கொண்டு வழக்கம்போல் பொருளில் லாத ஓர் அசட்டுச் சிரிப்பைச் சிரித்துவிட்டு அவன் போய் விடுவான். அந்தச் சிரிப்பு நாளாக நாளாக ராமாத்தாளுக்கு ஒரு தனிப்பட்ட இன்பத்தைக் கொடுக்கத் தொடங்கி யது; அவளுடைய உள்ளத்துக்குள்ளே எங்கோ ஒரு மூலையில் மங்கிக் கிடந்த தாய்மை உணர்ச்சியைக் கிளு கிளுக்கச் செய்தது. ஒன்றிரண்டு நாட்களில் இது ஏற்படவில்லை. இரண்டு ஆண்டுகளாக நாள் தவறிலுைம் செங்கப்பன்