பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனகன் #25. தாயம்மாள் : (வெறுப்போடும் எளனத்தோடும்) நீயா?. நீ ஒன்றுமே செய்யவில்லை. என் குடும்பத்தைத் தான் நாசம் பண்ணிய்ை...வேருென்றும் செய்ய வில்லை. - கமலம் : (இரங்கிய குரலில்) அக்கா, உன்னே விட்டு வரும்படி ஒரு நாள் கூட அவரிடம் நான் சொல்ல வில்லை; அவரேதான் வந்தார். தாயம்மான் : அவர் வந்தால், நீ எப்படியடி கூடக் குடி யிருக்கச் சம்மதித்தாய்? நீதானே அவர் மனசு கலைவ தற்குக் காரணம்? கமலம் : அக்கா, நான் சத்தியமாகச் சொல்லுகிறேன். உன்னேக் கெடுக்க எனக்குக் கொஞ்சங்கூட ஆசை யில்லை. ஆனல் அவரை விட்டுவிட்டு இருக்க என்னுல் முடியவில்லை. - தாயம்மாள் : உனக்கு மாத்திசந்தான் முடியாது. தாலி கட்டியவளுக்கெல்லாம் முடியும். என், அதுதானே நீ சொல்லுவது? - கமலம்: நீ என்னவோ கோபமாகவே பேசுகிருய், தயவு செய்து கொஞ்சம் யோசனை பண்ணிப் பார். அவருக்கும் என்னுடன் இருக்கத்தான் முதலி லிருந்து இஷ்டம். - தாயம்மாள் : இஷ்டமாக இருந்தால் அப்பொழுதே போய்த் தொலையலாமே? அந்த இரண்டு குழந்தை களைப் பெற்றுத் தெருவிலே விட்டுவிட்டு இப்படிப் போவது நியாயமா? காலம் : அக்கா, உனக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கு மென்று. எனக்குத் தெரியும். என்னைப்