பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葱笼姆 த சன் எழுத்தே விகாங்கள் இருந்த காசெல்லாம் செலவாய்விட்டது. இப் போது அவரும் வேலைக்குப் போக முடியாது. தாயம்மாள்: நீ வேலை செய்வதில்லையா? ககனம்: அவர்தான் இத்தனை நாளாகச் சம்பாதித்துப் போட்டார். என்ன வேலைக்குப் போகவேண்டாம் என்று சொல்லிவிட்டார். தாயம்மன் : நகைதட்டு இருந்தால் விற்றுச் செலவு பண்ணலாமே? - - * . கமலம் : இருந்ததெல்லாம் போன மாசத்திலேயே விற்றுவிட்டேன். ஆஸ்பத்திரியிலே இருந்தபோதே எல்லாம் தீர்ந்தது. ஏதாவது வேலை கிடைத்தால் தான் அவரைக் காப்பாற்ற முடியும்...அக்கா, நான் எங்கெல்லாமோ அலேந்து பார்த்துவிட்டேன்; நல்ல சம்பளத்தில் ஒரு வேலையும் கிடைக்கவில்லை. தாயம்மாள் : என் பாடும் திண்டாட்டமாகத்தான் இருக் אי கிறிது. கமலம் : அக்கா, உன்னிடத்திலே உதவி கேட்க எனக்கு அவமானமாக இருக்கிறது. இருந்தாலும் வழியில்லை. அவர் உயிர் பிழைக்க நான் என்ன செய்யவும் தயார். அக்கா, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். எதாவது வேலைக்கு வழியிருந்தால் சொல். மாசம் ஒரு முப்பது ரூபாயாவது கிடைத் தால்தான் அவர் உயிர் தப்பும். தாயம்மாள் : நீங்கள் பண்ணின அக்கிரமத்திற்கு எல் லாம் பட்டுத்தான். ஆகவேனும். கமலம்: அக்கா, நீ அப்படிச் சொல்லப்படாது. உனக்கு அவரிடத்திலே பிரியம் இல்லையா? அவர்