பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னே கந்த ஒண் - § தவருது செய்துவத்த உதவி அந்த உணர்ச்சியை உறக்கத்தினின்றும் தட்டி யெழுப்பியது. ராமாத்தாள் சொங்கப்பனை ஆப்பந் தின்னும்படி கூப்பிடுவதைக்கூட மறந்து விட்ட்ாள். அப்படி அழைப்பது வீண் என்றும் அவளுக்குத் தெரிந்து விட்டது. ஆளுல் அவன் அவளுடைய உள்ளத்திலே ஒட்டிக்கொண்டு விட்டான். சங்கம் புதரிலே பிறந் தவன் என்று அவனே யாராவது கேலியாகப் பேசு வதைக் கேட்டால் அவள் நெஞ்சம் சங்கம்புதர் முள் னாகக் குத்தத் தொடங்கியது. "நாய்க் குட்டியைச் சங்கம்புதரிலே போடுகிறவன் மனிதனு? அவன் மிருகத்துக்கும் கீழானவன்' என்று அவள் அடிக்கடி முணுமுணுப்பாள். அதைக் கேட்ட வர்கள் அவள் ஏன் இப்படிப் பிதற்றுகிருள் என்று ஆச்சரியப்படுவார்கள். முன்பெல்லாம் ராமாத்தாள் இயந்திரம் போல வேலை செய்து வந்தாள். ஆப்பம் சுடுவதையும் வேறுவேலே செய்வதையும் அவளால் நிறுத்த முடியாது. நிஜத்திகுல் உயிர்பாாக இருந்தது. ஆல்ை இந்தப் புதிய உணர்ச்சி எழுந்த பிறகு அவளுடைய வேலை களுக்கு ஒரு புதிய பொருளும், அவசியமும் ஏற்பட்டு விட்டன; அதனுல் அவள் வாழ்க்கையிலே இன்பம் காணத் தொடங்கினுள். ஆணுல் அந்த இன்பம் வெகுநாள் நீடிக்கவில்லை. ராமாத்தாள் திடீரென்று ஒரு நாளிரவு காய்ச்சல் வந்து சேர்ந்து படுத்து விட்டாள். மறுநாட் காலையில் வழக்கம் போலச் சொங்கப்பன் வாசலில் வந்து வெகு தேசம் காத்திருந்தான். அவன் வீட்டுக்குள் நுழைகிறா பழக்கம் இல்லை.