பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፳ሴ 'வீட்டுக்குள்ளே வா' என்று ராமாத்தாள் பல முறை அழைத்ததுண்டு. "இங்கேயே நிக்கிறேன். வீட்டுக்குள்ளே இருட் டாக இருக்குது' என்பான் சொங்கப்பன். இருண்ட ◌◌ ◌ ◌ມ # கண்டால் அவ னுக்குப் பயம், ஊர் பேர் அறியாத ஒரு கருப்பைக்குள்னே அவன் பட்ட துன்பத்தின் விஃாவோ என்னவோ, இந்தப் பயம் அவனுக்கு எப்பொழுதும் உண்டு. சொங்கப்பன் காத்திருந்தான். கிழவி கட்டிலை விட்டு எழுந்திருக்கவே யில்லை. அவன் போய் விட்டான். நான்கு நாட்கள் ராமாத்தாள் எழுந்திருக்க வில்லை; படுத்த படுக்கையாகக் கிடந்தாள். பக்கத்து வீட்டுப் பெண்ணுெருத்தி கஞ்சி வைத்துக் கொடுத் தாள். அதைக்கூட அவள் சாப்பிடவில்லை. - அந்த நான்கு நாட்களும் காலையிலே சொங்கப்பன் அவள் வீட்டுத் திண்ணைக்கு வருவதிலே தவறவில்லை. நான்காவது நாள்தான் அவ்ளுக்கு உடம்பு சரியில்லே என்று அவனுக்குப் புலப்பட்டது. ஐந்தாம் நாட் காலையிலே ராமாத்தாள் அடிக்கடி, "சொங்கப்பா, சொங்கப்பா" என்று கூப்பிட்டுக்கொண் டிருந்தாள். அவன் திண்ணைக்கு வந்ததை அறிந் ததும், மெதுவாகக் கட்டிலே விட்டு இறங்கி வெளியே வந்தாள். கஞ்சி கூடக் குடிக்காமல் கிடந்ததால் கனல் கள் தள்ளாடின; தலை சுற்றியது. அவன் அப்படியே மயக்கம் போட்டுக் கதவின் மேல் சாய்த்தாள். சொங்கப்பன் அவளைத் தூக்கிக்கொண்டு போய்க் கட்டிலில் படுக்க வைத்தான். கொதிக்கும் அவ ளுடைய உடம்பின் பரிசம் அவனுக்குச் சொல்ல முடி