பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H2 துரான் எழுத்தோனியங்கள் தையைப் போல ஒடியாடி வேலை செய்தான். “நானே ஆப்பம் சுடட்டுமா?" என்று அவன் கேட்டான். "வேண்டாம் சொங்கப்பா, இன்று ஒரு நாளைக் காவது என் கையாலே சுட்ட ஆப்பத்தை நீ சாப்பிட வேணும். அது ஒண்ணுதான் எனக்கு இப்போ ஆசை” என்று அவள் கொஞ்சிய குரலிலே சொன்னுள். "சரியம்மா' என்ருன் சொங்கப்பன். அம்மா என்று எதிர்பாராது வந்த அந்தச் சொல் இரண்டு பேரையும் அமிழ்தக் கடலிலே முழுக்கி விட்டது. : - சொங்கப்பன் ஆப்பத்தைத் தனது இயல்பான பசிக்கேற்றவாறு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சர மனத்தாள் அவன்முகத்தையும் தலையையும் கையாலே த.விக் கொண்டிருந்தாள். சொங்கப்பன் சாப்பிட்டு முடிந்ததும், அவனைத் தள் அருகிலே கட்டிலின் மேலேயே உட்காரும்படி ராமாத்தாள் சொன்னுள், அவனும் உட்கார்ந்தான். "சொங்கப்பா, அதே அந்த மூலையிலே பெரிய மிட இருக்குது பார்த்தாயா? அதுக்குக் கீழே இரண் டாயிரம் ருபாய் புதைச்சு வச்சிருக்கிறேன். நீ அதை எடுத்துக்கோ. யாருக்கும் கொடுத்து விடாதே' எனருள அவள. t "ரண்டாயிரமா?’ என்று சொங்கப்பன் ஒன்றும் புரியாமல் கேட்டான். "ஆமாம். இந்த நாப்பது வருசமா ஆப்பஞ் சுட்டுச் சம்பாதிச்ச மிச்சம்-எல்லாம் உனக்குத்தான். அதை வைத்து ஒருடகவியாணம் பண்ணிக்கிட்டு நீ சொகமா, பிள்ளை குட்டிகளோடு வாழவேணும்" எனருள.