பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் ஆன கத்தி ஒணி 愁· சொங்கப்பனுக்கு விஷயம் நன்ருக விளங்க வில்லே. இருந்தாலும் தன் நன்மைக்காக ஏதேதோ சொல்லுகிருள் என்று உணர்த்துகொண்டிருந்தான். "அம்மா, எனக்கு என்னத்துக்கு இப்போ ஆப்பம் சுட்டுப் போட்டாய்?" என்று சொங்கப்பன் குழந்தை யைப் போலக் கேட்டான். “என் கையாலே உனக்கு ஒருநாள்கூட சாப்பாடு போடrது போளுல் எனக்கு மோட்சங் கிடைக்குமா? நீதானே எனக்கு மோட்சங் கொடுக்க வந்திருக்கிருய்?" என்று அவள் பூரிப்போடு கூறினுள். அவள் முகத் திலே என்றுமில்லாத ஆனந்தம் தாண்டவமாடியது. சொங்கப்பன் அவள் முகத்தை ஆச்சரியத்தோடு பார்த் துக்கொண்டே இருந்தான். ராமாத்தாள் அப்படியே உறங்கிவிட்டாள். நிறைவும் அமைதியும் அவள் முகத் தில் தோன்றின. - - - அவள் மறுபடியும் எழுந்திருக்கவே இல்லை. சொங்கப்பன் அன்றுதான் துக்கம் என்பதை நன்குக உணர்ந்து கொண்டான். சங்கம் புதரிலே கிடக்கும். தந்தை தாயற்ற பூனைக்குட்டியைப் போல 'அம்மா, அம்மா’ என்று அலறிஞன். ராமாத்தாள் விரும்பியவாறு சொங்கப்பன் அந்த வீட்டிலேயே ரொம்ப நாள் வசிக்கவில்லை. அவள் இறந்த ஒரு வாரம் வரையில்தான் அவன் அங்கிருந் தான். ராமாத்தாள் அவனுக்கு நிறையப் பணம் சேர்த்து வைத்துவிட்டுப் போயிருக்கிருள் என்கிற விஷ யம் அதற்குள் ஊரெல்லாம் எப்படியோ பரவிவிட்டது. அந்த விஷயம் வெளியானதற்குச் சொங்கப்பனே. தான் காரணம்-அவன் தனக்கு ஆறுதல் கூற வந்த வர்களில் ஒன்றிரண்டு பேரிடம் அந்தப் பணத்தைக்