பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盖莎 து தன் rழுத்தோவியங்கள் டாயிரம் ரூபாயையும் கொண்டுவந்து கோயில் உண்டி வில் போட்டுவிட்டு நிம்மதியாக வீடு திரும்பிஞன். அன்றிரவு பன்னிரண்டு மணிக்கு ஓர் எதிர்பாராத சம்பவம் நடந்தது. யாரோ நான்கு தடியர்கள் சொங் கப்பன் இருந்த வீட்டுக்குள் நுழைந்தார்கள். வீட் டைச் சோதனை போட்டார்கள். பணம் எங்கே?” என்று அவனை அஆட்டினர்கள். - "பணம் சாமிக்குப் போயிட்டுது' என்ருன் சொங் 、墨蕊”。 r - “டேய், பொய்யா பேசருய்? பேசாமல் எல்லாத் தையும் கொடுத்துவிடு-இல்லாவிட்டால் பார்த் துக்கோ' என்று கைத்தடியை ஓங்கிஞர்கள். "ராமாத்தாளுக்கு மோட்சம் வேண்டாமா? எனக்கு எதுக்குப் பணம்?' என்று அவன் அதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தான். திருடர்களுக்குக் கோபம் வந்துவிட்டது. அவனைக் கட்டிலோடு சேர்த்துக் கட்டி வைத்து அடி அடி யென்று அடித்து நொறுக்கிவிட்டார்கள். மறுநாள் காலையில் உயிருக்கு மன்ருடிக்கொண் டிருக்கும் நிலையில் சொங்கப்பனை ஊரார் கண்டார்கள். அவன் விலாவெலும்பு இரண்டு முறிந்திருந்தன. மேலெல்லாம் வீங்கி யிருந்தது. பெரிய பண்ணைக் காரர். அவனுக்கு வேண்டிய சிகிச்சைகளை யெல்லாம் செய்ய ஏற்பாடு செய்ததோடு அவனைப் {Ꮧ{Ꮡ துகாக்கவும் முன் வந்தார். - சொங்கப்பன் குணமாகி எழுந்தான். ஆளுல் அவனுல் நிமிர்ந்து நடக்க முடியவில்லை. முதுகு எலும்பில் ஏதோபழுது ஏற்பட்டு அவன்-கண்ணுகி. விட்டான, ஒடியாடி வேலை செய்யும் சக்தியும் போய்'