பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதியின் பீழை 24 யாரிடத்திலும் நெருங்கிப்பழகாமல் அடக்கமாக ஒதுங்கி யிருந்த முத்துசாமியுடனும் அவன் நான்கு வார்த்தை பேசிப் பதில் வாங்காமல் விடமாட்டான். - - தண்டனை முடிந்து விடுதலையாகி வெளியே புறப் படும் முத்துசாமியிடம் மாரியப்பன் பேச்சுக் கொடுத் தான் : “முத்துசாமி, வெளியே போய் என்ன செய்யப் போகிருய்?" “என்னுடைய நிலம் எனக்காகக் காத்துக்கொண் டிருக்கும்; அதை நான் உழப்போகிறேன்' என்று உள்ளக் கிளர்ச்சியோடு முத்துசாமி பதில் சொன்னன். "அட போப்பா, நிலம் உனக்காகக் காத்திருக் குமா? அப்படி யெல்லாம் எதிர்பார்த்து ஏமாந்து போகாதே. ஆளுல் நீ என்ன வேனுமானுலும் செய்; கவியாணம் மட்டும் பண்ணிக்காதே’ என்ருன் மாரி 莓_懿_瑄。 . இதைக் கேட்டதும் முத்துசாமி திடுக்கிட்டான். பதினைந்து ஆண்டுகளாக அடிமனத்தில் அழுந்திக் கிடந்த ஏதோ ஒரு ஆசையால் கட்டுண்டு அவன் பதில் கூருமல் நின்றிருந்தான். “புத்தியுள்ளவகை இருந்தால் கலியாணத்திலே மாட்டிக்காதே. பின்னல் என் கதிதான் உனக்கும் வரும். அப்புறம் இந்த இடமே நல்லதென்று தோணும்' என்று சொல்லிவிட்டு மாரியப்பன் போய் விட்டான். இவ்வாறு சொல்லி வழியனுப்பிய மாரியப்பன்கூட முத்துசாமியை மறுபடியும் சிறைக்குள் பார்த்தபோது திகைத்துப் போனுன்டமுத்துசாமியிடம் தனித்துப் பேசி விஷயத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் அவனைப் பீடிக்கத் தொடங்கியது.