பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசஆகக் க. கண் 3? துப்பாக்கியின் பிடியும் தளர்ந்து போயிற்று. கைகள் இரண்டும் ெநஞ்சின் மேலே கட்டைகள் போலக் கிடந்தன. * அடர்ந்த காட்டிற்குள்ளே அவன் இவ்வாறு அயர்ந்து என்றும் தூங்கினதே இல்லை. இன்று. அவனுக்குப் பொல்லாத காலம் போலிருக்கிறது. அவன் ஆழ்ந்து உறங்கும் சமயத்திலே அவ னுக்கு எதிரிலே ஒரு பயங்கரக் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கலைமான் ஒன்று மருண்டு மருண்டு பார்த்துக்கொண்டு மெதுவாக நீர்நிலையை அணு கிற்று. அதன் காதுகள் விறைப்பாக நின்றன. மான் தனது வாயை நீரில் வைப்பதற்குமுன் மறுபடியும் சுற்றிலும் ஒரு முறை ஊடுருவிப் பார்த்தது. அவ் வளவுதான்; அக்கணமே திடீரென்று திரும்பி மின்னல் வேகத்தில் வந்த வழியிலேயே தாவிற்று. அதே சமயத்தில் பஞ்சுக் காலன் அதன் மேலே சரேலென்று பாய்ந்தது. அதன் நகங்கள் வெளியில் கோரமாகத் துறுத்திக்கொண்டு மானின் உடலைக் கிழிக்கத் தயாராக இருந்தன. ஆகுல் ஒரு முழ துரத்திற்குள் அதன் பாய்ச்சல் தப்பிப் போய்விட்டது. கலைமான் தனது முன்னெச்சரிக்கையினுலும் கால்களின் உறுதி யாலும் உயிர் பிழைத்துச் சென்ருேடி மறைந்தது. பஞ்சுக் காலனின் முதுமையும் பாய்ச்சல் தூரக் குறைவும் மானுக்கு உதவியாக நின்றன. பஞ்சுக் காலன் பாய்ந்ததாலும், மரச் செறிவிற்குள் امسي மான் குதித் தோடியதாலும் ஏற்பட்ட அரவத்தால் சுந் தரம் விழித்துக்கொண்டான். ஆனுல் அவன் திடுக் ந்திருக்கவில்லே. காட்டிற்குள்ளே அப்படி உயிருக்கு ஆபத்து என்று அவனுக்கு