பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப2.1. :ாக் கை $5. பத்து நிமிஷமாயிற்று, அரை மணி, ஒரு மணி ஆயிற்று. திரும்பி வருவதற்கு அவனுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? நாங்களும் அவன் வரவை எதிர்பார்க்கவில்லை. கடிகாரத்தை மறதியாக வேறு எங்காவது வைத்துவிட்டேனு என்று தேட வேண்டாத இடமெல்லாம் தேடிக்கொண் டிருந்தோம். தேடும்போதே இது பட்டணம் கையின் வேலைதான் o என்பது எங்களுக்கு நன்கு புலப்பட்டுவிட்டது. இருந் தாலும் எல்லா இடங்களையும் துருவிப் பார்த்து விட்டோம். நான் அன்று இசையரங்குக்குப் போகவில்லை. போலீசில் பிராது கொடுத்தல் முதலிய செயல்களில் இரண்டு மூன்று மணி நேரத்தைத் தொலைத்துவிட்டு வீடு திரும்பினேன். அதே சமயத்தில் என் நண்பனும் வந்து சேர்ந்தான். அவன் அன்று காலையில்தான் சென்னைக்கு வந்தான். பட்டணம் பார்க்கவேண்டு மென்று அவனுக்கு ஆசை. அதனுல் கிறிஸ்துமஸ் சமயத்தில் உள்ள வேடிக்கைகளை யெல்லாம் பார்க்கலா மென்று புறப்பட்டு வந்திருக்கிருன். காலையில் சாப் t பிட்டுவிட்டுக் கிளம்பியவன் அதுவரையில் எங்கெங்கோ சுற்றிவிட்டு வந்தான். வந்தவன் மகிழ்ச்சியோடு, அ “கைக் கடிகாரம் ஒன்று வாங்க வேண்டுமென்று சொன் னேனல்லவா? நல்லதாக ஒன்றைக் குறைந்த விலை கடிகாரத்தை உடனே என்னிடம் காட்ட நண்பன் விரும்பவில்லே அதை நான் வாங்கிய விதத்தைப் பற்றிச் சொல்கிறேன். பிறகு கடிகாரத் தைப் பார்க்கலாம்' என்றுன் அவன்.