பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறக்கம் தந்த ஓவியம் 57 கிருள். தம் பேரனுடைய உயிர்த் தோழன் என்று அறிந்தது முதல் அவரும் இவனிடம் அளவுகடந்த அன்பைக் காட்டலானர். கொங்கு நாட்டில் ஈரோட் டிற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திலே அவர் தனியாக வாழ்க்கை நடத்திவந்தார். விவசாயத்திலே அவருக்கு நல்ல வரும்படி உண்டு. அதைக் கொண்டு தம் பேர னைச் செல்வமாக வளர்த்துப் படிக்க வைத்தார். கல் லூரியிலே இரண்டு ஆண்டுகள் படித்துவிட்டுப் பிறகு ஓவியக் கலை பயிலவேண்டு மென்று கோபாலன் விரும் பியதால் அவன் விருப்பப்படியே அழகுக் கலைப் பள்ளியில் சேர்ந்துகொள்ள அவர் இசைத் தார். கோபாலனைப் பார்க்க அவர் இரண்டு மாதங் களுக்கு ஒரு முறையாவது சென்னைக்கு வருவ துண்டு. கண்ணப்பனுடைய கடிதம் கண்ட அன்றே அவர் புறப்பட்டு மறுநாள் காலை சென்னை வந்து சேர்ந்தார். கோபாலன் பள்ளிக்குப் புறப்படும் வரை கண்ணப்பன் தான் அவரை வரும்படி எழுதியதன் காரணத்தைக் கூறவில்லை. வழக்கமாக மருத்துவக் கல்லூரிக்குக் கண்ணப்பன் கோபாலனுக்கு முன்பே கிளம்பி விடு வான். ஆனல் அன்று அவன் கல்லூரிக்குப் போக வில்லை. தினமும் கல்லூரிக்குப் போய் அலுத்துவிட்ட தென்றும், அன்று முழுவதும் தாத்தாவோடு அரட்டை யடித்துக்கொண்டு உல்லாசமாக இருக்கப் போவதாகவும் அவன் கூறினுன். “ஏண்டா, கல்லூரிக்கு மட்டம் போடவா பார்க் கிருய்? தாத்தாவாலே நீ வீ ஆகக் கெட்டுப் போகி ருய்!” என்று கேலி செய்துகொண்டே கே. பாலன். பள்ளிக்குப் புறப்பட்டான்.