பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னேத் ம் {} உள்ளம் பண்பட வேண்டும். அப்பொழுதுதான்மணி, சமூகத்திற்கு உய்வுண்டு; அப்பொழுதுதான் மனித சமூகம் தனது முன்னேற்றத்தைப் பற் றிப் பெருமை யடித்துக்கொள்ள முடியும். மனிதன் தன்னுடைய நாகரிகத்திற்கும் முன்னேற் றத்திற்கும் அறிகுறியாக வெடிகுண்டுகளையும், டாங்கி களையும், நீர்மூழ்கிக் கப்பல்களையும் கருதும் வரையில் அவனுக்கு உய்வில்லை. உண்மையில் இன்று அவை களை யெல்லாம் செய்து வைத்துக் கொண்டிருக்கும் மக்களே ஒருவரோடொருவர் சண்டை யிட்டுக்கொண்டு மண்டையை உடைத்துக் கொள்ளுகிருர்கள். ஒருவரை ஒருவர் மிக விரைவிலே அழித்து விடுவதற்குப் போட்டி போட்டுக்கொண்டு வழிகளும் படைகளும் கண்டு பிடிக்கிருர்கள். பாமரர்களாகக் கருதப்படும் மக்கள் அமைதியோடு வாழ்கிருர்கள். அப்படி இருக் கும்போது எதை நாகரிகம், முன்னேற்றம் என்று சொல்லுவது? * இன்று மனிதன் டாங்கிகளையும், பீரங்கிகளையும் அணிவகுத்து நிறுத்திப் பெருமைப்படுகிருன் சொந்த இனத்தையே ஒழித்துவிட எனக்கல்லவா இத்தனை இயந்திரங்கள் இருக்கின்றன என்று கர்வமடை கின்ருன். ஆளுல் எப்பொழுது அவன் இவற்றை யெல்லாம் பார்த்துத் தனது அரக்கத் தன்மைக்காக நாண மடைகின்ருனுே அப்பொழுதுதான் அவன் நாகரிகம் அடைந்தவனுவான். உலகமே ஒரு குடும்பம்; அதில் வாழும் அனைவு ரும் உடன் பிறந்தவர்கள்; அவர்கள் எல்லோரும் ஒருவன் போலவே இன்புற்றிருக்க வேண்டும் என்ற. எண்ணித்தின் வளர்ச்சியே மனித சமுதாயத்தின் முன்