பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-76 துன சன் எழுத்கோவியங்கின் இருட்டுக் குருவி எதற்காகப் பிறந்திருக்கிறது? காக் கையாவது உலகத்தைச் சுத்தம் செய்கிறது; குயி லாவது இனிமையாகக் கூவுகிறது. இந்தக் கரிக் குருவி என்ன செய்கிறது?. வைகறையில் துயில் எழுப்ப ஒரு நல்ல, அழகிய பறவை இருக்கப்படாதா? அதனுடைய குரலைப் பார்; எத்தனை. கடும்! ളുഖ . வாருக நான் வெறுப்போடு எண்ணமிடுவேன். இரட்டை வால் கரிக்குருவி மிகத் தந்திரம் தெரிந் தது. அது ஆட்டின் மேலே ஒய்யாரமாக வாலை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்து கொள்ளும் ஆடு பாவம், மேய்ந்து கெர்ண்டே போகும். போகப் போகச் செடிகளின் மேலே, புல்லின் மேலே, தரையின் மேலே ஒட்டிக் கொண்டிருக்கும் வெட்டுக்கினி முதலிய சிறு பூச்சிகள் பறந்து வேறிடம் பார்த்துக்கொள்ளக் கிளம்பும். இந்தக் குருவி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து லபக்கென்று அவற்றை வாயில் போட்டுக்கொண்டு மறுபடியும் ஆட்டின் மேலே சவாரி செய்யத் தொடங்கி விடும். அதைக் காணும்போது எனக்கு வெறுப்பு மேலும் அதிகரிக்கும். சாதுவான ஆட்டை இப்படித் தன் காரியத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதைக் காண எனக்குச் சகிப்பதில்லை. - ஆனல் அண்மையில் திகழ்ந்த ஒரு நிகழ்ச்சியால் அந்த வெறுப்பு மாறிவிட்டது. - - ஒரு மாலை நேரம். இளங்காற்று இனிமையாக வீசிக் கொண்டிருந்தது. தான் மேட்டு நிலங்களி டையே உலாவிக் கொண்டிருந்தேன். ஓரிடத்தில் ஒரு கிழவன் செம்மறி ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந் தான்._வழக்கம்போல ஒராட்டின்_மேலே இரட்டை வால் கரிக் குருவி ஒன்று உரிமையோடு அமர்ந்து தன்