பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ4 து சன் எழுத்தோவின:ங்கள் வாயைப் பிடுங்குகிறீர்? கல்யாண விருந்து ஆட்டி வைக்கிறதாக்கும்' என்று பேசிவிட்டு மறுபடியும் திரும்பி உடனே படுத்துவிட்டார். நான் திகைத்துப் போனேன்; என்ன பதில் கூறுவது என்று தோன்ற வில்லை. குறட்டை போடுகிறவர்களுக்குத் தாங்கள் செய்யும் சப்த ஜாலங்களைப்பற்றித் தெரிகிறதே இல்லை; பிறர் சொன்னுலும் அவர்கள் நம்பமாட்டார்கள் என்று எனக்குத் தோன்றிற்று. . அதனுல் அவருடன் வாதாடுவதைவிட அவர் நித்திரை போகுமுன்பே நானும் தூங்கிவிட்டால் பிரச்சினை ஒருவாறு தீர்ந்துவிடும் என்று எண்ணி மறு வார்த்தை கூருமல் சாய்ந்தேன். ஆனல் அந்த மகான் படுத்ததும் நாலு மூச்சுத்தான் தேராக வந்தன. மறுபடியும் பழையபடி குறட்டை தொடங்கிவிட்டது. அவரை மேலும் எழுப்புவதில் ஒரு பயனும் ஏற். படாது என்று தோன்றியதால் வேறு எங்காவது இடம் பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பினேன். ஒரே இருட்டு. எங்கே பார்த்தாலும் பலபேர் படுத்துக் கொண்டிருந்தார்கள். மின்சார விளக்கைப் போடுவ தற்கும் இடம் தெரியவில்லை. ஓர் இரண்டடி எடுத்து வைத்ததும் யாரோ ஒருவர் கள்லை மிதித்துவிட்டேன். அதஞல் அவர் என்னவோ முணுமுணுக்கத் தொடங்கி விட்டார். இனி எச்சரிக்கையாக நடக்கவேண்டு மென்று அடிமேல் அடி வைத்துப் பம்பிப் பம்பி நகரத் தொடங்கினேன். அந்தச் சந்தர்ப்பத்தில் ஒருவர் விழித்துக் கொண்டார் போவிருக்கிறது. டேய்! யாரது? என் இப்படி இருட்டிலே பதுங்குகிருய்? கல் ------------------- யாணவீட்டிலே முடிச்சவிழ்க்கவா?-என்றுடகத்தம் போடலானுர்.