பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 سه شهر زن மற்றவர்களும் விழித்துக்கொண்டால் நிலைமை ஆபத்தாய்விடுமே என்று சட்டென்று மறுபடியும் பழைய இடத்திற்கே வந்து படுத்துவிட்டேன். சரி, இன்று எனக்கு வேறு கதியில்லை. இங்கேயே கிடந்து சகிக்க வேண்டியதுதான் என்று முடிவு செய்து கொண்டேன். ஓர் இரவிலேயே இத்தனை தொல்லை யென்ருல் அந்த மனிதன் வீட்டிலே மனைவி மக்கள் ஆண்டு முழுவதும் இதை எப்படிச் சகிக்கிருர்களோ என்று அவர்கள்பால் பரிவு கொள்ளலானேன். எவ்வளவு தேரம் நான் அவர்களுடைய பரிதாப் நிலைமையைப் பற்றி எண்ணிக்கொண் டிருந்தேனே, தெரியாது. எப்படியோ அந்த எண்ணத்தோடேயே உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டேன். மறுநாட் காலையில் யாரோ ஒருவர் அதட்டி அதட்டி எழுப்பியிராவிட்டால் எப்பொழுது விழித்திருப்பே னென்று திட்டமாகச் சொல்ல முடியாது. "ஒய், யாரையா நீர்? மணி எட் டாகியும் இப்படிக் குறட்டை போட்டுக்கொண்டு துரங்கு கிறீரே; எழுந்திரும்” என்று அதட்டும் குரல் காதில் புகுந்து என்னைத் திடுக்கிடச் செய்தது. எழுந்து சுற்று முற்றும் பார்த்தேன். அப்பொழுது துரங்கிக்கொண் டிருந்தவன் நான் ஒருவன்தான்!