பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க:ாள் விளையாட்டு : $9. குன், இப்பொழுதுதான் அவலுக்கு நல்ல காலம் வந்திருக்கிறது. இளமங்கை: ஏன் கல்யாணம் வேண்டாமென்ருர்? கிழவி: அந்தக் கூத்தை ஏன் கேட்கிருய்?. இந்த ஊரிலே ஒரு சிறுக்கி வந்திருந்தாள். வாத்தியார் வேலை பண்ணுவதாகச் சொல்லிக்கொண்டு அவனை மயக்கிக் கொண்டிருந்தாள். இந்தப் பையனே கல்யாணம் பண்ணில்ை அவளைத்தான் பண்ணிக் கொள்வேன், இல்லாவிட்டால் கல்யாணமே வேண் டாம் என்று ஒரே பிடிவாதமாக இருந்தான். இளமங்கை: இப்பொழுது எப்படிச் சம்மதித்தார்? கிழவி : இப்பொழுதா? அந்த ஊர்சுற்றிதான் எங் கேயோ ஒடிப் போய்விட்டாளே? இனமங்கை: எங்கே போளுளோ? கிழவி : எனக்கு எப்படித் தெரியும்? வேறு யாரை யாவது மயக்கப் போயிருப்பாள். இளமங்கை : (தயக்கத்தோடு) அவள் பெயர் உங்களுக் குத் தெரியுமா? கிழவி : (ஏளனமாக) சரோஜாவாம்...சரோஜா! நாய்க் குப் பேர் முத்து மாலை. அவள்தான் தொலைந்து போளுளே, இந்தப் பையன் உடனே கல்யாணம் செய்துகொள்ளப் படாதா? அவளேயே தேடிப் பிடித்து வந்து பண்ணிக்கொள்வே னென்று அடம் சாதித்தான். ஒரு வருஷமாக எல்லோரும் சொல்லிச் சொல்லி இப்பொழுதுதான் சரியென்று சொன்னன். இளமங்கை : "சரியென்று சொல்லிவிட்டாரல்லவா?