பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 வாழ்க்கைப் பிரயாணம்

ஒடக்காரா என்னை நீ எங்கு தள்ளிச் செல்லுகின்ருய்? கொந்தளித்துக் குமுறும் வெள்ளத்தில் அலையவைத்தாய் பாறைகளில் மோதி வேடிக்கை பார்த்தாய்.சேற்றிலே புதைந்து அலமரச் செய்தாய். பயணம் தொடங்கியது முதல்ஒரே கவலை; ஒரே கலக்கம், இன்பமென்று கண்டதெல்லாம் கனவாகிவிட்டதே! சிறிதாவது அமைதி உண்டா? ஒய்வுண்டா?

ஒடக்காரா, உனக்கு இரக்கமில்லையா? மோதி அடிபட்டுச் சட்டகமும் கலகலத்துப் போய் விட்டதே? அந்திப் பொழுதும் நெருங்கிவிட்டதே? இனியாவது அமைதியான நீரில் செல்லலாகாதா? இப் பயணம் எப்பொழுதுதான் முடியுமோ? உறங்கிக்கிடப்பதும், விழித்துச் செல்வதுமாய் எத்தனை காலந்தான் கழியுமோ? எத்தனை உடைகள் மாற்றி மாற்றி அணிவதோ?

ஒடக்காரா இன்னும் கருணை பிறக்கவில்லையா?

            107