பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அன்புவழி அறிவெதற்கு? மனம் எதற்கு?

 அனைத்தையுமே 
               அழிப்பதற்கோ?

ஆக்குதிறன் எல்லாமுன்

 அழிவுக்கே வழிசெயவோ? இறகுபெற்ற சிற்றெறும்பு
 எழுந்துபறந் தெரிதீயில் விழுந்தழிந்து மாய்வதுபோல்
 வித்தையினல் மாய்ந்திடவோ? விலங்குணர்ச்சி மாய்க்காமல்
 வெற்றிபல பேசியென்ன? வெளியியற்கை வெற்றியெலாம் 
 மெய்வெற்றி யாகாது. உலகெல்லாம் ஒருசேர
 ஒழிக்கவல்ல படைகண்டோம்; ஒழிந்திடவோ மக்களினம்
 உயரத்தான் செய்வோமோ? நெருக்கடியிந் நிலையினிலே
 நீசமனப் புன்மையெலாம் நீங்கிடவே நல்லறிவால்
 நிச்சயித்து மனம்விரிய உருத்தெழுந்து நிற்போமோ?
 உடல்வளர்ச்சி யோர்நிலையில் ஒய்ந்துமெல்ல நலிவதுபோல்
 உள்ளம் நலிந்திடுமோ? புல்லாகி மரமாகிப்
 புழுபறவை விலங்காகிப்
           113