பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அன்புவழி

மாற்றிடவும் ஆகாதோ?

   மரணந்தான் இதன் முடிவோ? மானிடனே, இல்லை இல்லை,
   இக்கருத்தை நான் ஏற்கேன்; புத்தனென்றும் இயேசு வென்றும் 
   புனிதமுனி காந்தி யென்றும் வாடுமிளம் பயிர்கண்டு
   வாடுமருள் வள்ளலென்றும் இத்தரையில் வந்தவர்கள்
   இம்மனமும் அன்பினிலே எவ்வுயிரும் தன்னுயிராய்
  எண்ணும்வகைகாட்டுவித்தார்; வன்மையுண்டு மனத்திற்கும்
    மலர்ந்ததுவும் ஓங்கிவிடும்; எழுந்திரடா புறவெற்றி போதும்; 
  இனி அகவெற்றி நாடிடுவாய்: மென்மை உணர்ச்சி யெலாம்
   மேலோங்கச் செய்திடுவாய்; விண்ணொளியால்குகையிருட்டை 
   விழுங்கிடவே செய்திடுவாய்: அன்பினிலே மனம்மலர -
   அமரனைப் போல் வாழ்ந்
   திடுவாய்; 

இன்பம் பெருகி யெங்கும்

   எவ்வுயிரும் மகிழ்ந்திடவே அன்புவழி அன்புநிலை
  அன்புச் சிவமாவாய் அன்புவழி யோங்கிவிட்டால்
     அமரநிலை வந்திடுமே.


           115