பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 காதல் ஏக்கம்

பட்டிக் காட்டில் வளர்ந்த பசப்பறியா இளமங்கை; வெட்டி யலங்கரித்து வளர்க்காத காட்டுப்பூ; கண்ண மறியாத சோதி முக முடையாள்; கண்ணுக்கு மையில்லை; கடைக்கண்ணிற் குறும்பில்லை; செயற்கைக் குழல்சேர்த்துச் சிங்காரஞ் செய்யாத இயற்கைவனப்புடனே என் முன்னர்த்தோன்றி நின்ற

மங்கைதனைக்கண்டு மனது பறிகொடுத்தேன். எங்கும் அவள் தோற்றம் என்னைப் பரவசிக்கப் பெண் கொடுக்க வேண்டுமெனப் பெற்ருேரைக் கேட்டிடவே சொந்தக் காரர்சிலரைத் தூதாகப் போகவிட்டேன் ; "பத்தாவது தானும் படித்திருந்தால் பத்தாது, சொத்து சுகமென்ன?"வென்றார்; சோர்ந்துமே நான் விழுந்தேன். காதல் தன முண்டு ; காணி தனம் குறைவே. ஆதலினல் பெண் கொடுக்க அவர் மறுத்து விட்டாரே. 'உடல் வலிமையுண்டு; ஊக்கமுடனே யுழைப்பேன்; கடலைக் கடந்தேனும் காதலியைக் காத்திடுவேன்? காசு பெரிதோ?காதல்பெரிதெ'ன்றேன்:

             118