பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 காதல் ஏக்கம் கூசாதுநான் சொல்லிக் கலியுகத்தின் விந்தை யென்று பெற்ருேர் சிரித்தார். பேச்செடுக்க வேண்டாமென்றார். உற்ருரும் உள்ளுக்குள் ஊறுஞ் சிரிப்புடனே கைவிட்டு விட்டார்கள்; கண்ணே நான் செய்வதென்னே ? நொய்பட்டு வாடுகின்றேன் நிவர்த்தி யொன்றுங்கானேனே ! உன்கண்ணிற் காதல் உயர்ந்தோங்க நான்கண்டேன் பின்னுன்றன் உள்ளம் பெற்ருேர் அறிவாரோ? மேல்வீட்டுச் சின்னப்பன் மெத்தப் பணக்காரன்; கால் நடைகள் கணக்கில்லை கழனிகளும் தோப்புகளும், அவனுக் குனைக்கொடுக்க ஆசையுட னிசைந்து விட்டார். "தவணை யொன்றுமில்லை சடுதியிலே செய்திடலாம் கண்ணாலம்" என்றார், கருத்ததனைத் தானறியப் பெண்ணை யுளங் கேட்கும் பேதமையை யார்செய்வார் ஆடுகளை விற்பதுபோல் அடுக்களையில் வைத்துப்பின் கூடி மணம்பேசிக் கூசாமல் தள்ளிடுவார்; பஞ்சாங்கம் பார்ப்பவரைப் பத்துத்தரம் கேட்பார்; கொஞ்சும் மதலைகளைக் கனவிலுமே கேட்டறியார்; பணப் பொருத்தங் கேட்பார், பல சீர்க கேட்டிடுவார்: மணப் பொருத்தங் கேட்பார், மனப் பொருத்தங் கேளாரே!

            119