பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அவலம் அவலமெனும் பேயரக்கன் அன்றொரு நாள் வந்தான்.

 அவனுருவம் கண்டவர்கள் 
 அஞ்சுதலும் வியப்போ? 

குழிந்த கன்னம் குழிந்த விழி கூரீட்டி போலே,

 இழிந்து பல திசைகளிலும் 
 ஏகும்முடி தாடியுடன் 

வானகத்தேஓங்கிவளர்மரக்கூட்டம் நிறைந்த

 கானகத்துக் குகைதோன்றும் 
 கரடியென நின்றான். மேனியெல்லாம் அவன் தரித்த விருதுகள்தாம் என்னே! 
 மேனியிலான் வாளியினால் 
 வீழ்ந்த பல உள்ளம், 

காடுசென்று தவங்கிடந்து கதிகாணான் கலக்கம்,

  கோடிபல சேர்ந்த பின்னும் 
  குறையாத பேராசை-

இப்படியாய் எண்ணிலவாம்: 'இவையெல்லாம்என்றன்

 செப்பறிய திறல்காட்டும் சில 
 பதக்கம்' என்றான்: 

"செத்தவரை எண்ணியழும் கண்ணீரில் தினமும்

 மெத்த மகிழ்ந் தாடிடுவேன்; 
 நத்தியவர் உயிரைத் தின்றிடுவேன்;உன்னையும் நான் 

சேர்ந்திருக்க வந்தேன்"- என்றுசொல்லித்தான்நகைத்தான்,

இடி முழக்கம் கேட்டேன்; 

"என்னிடத்தே வந்தனையோ? இருப்பாய் நீ நன்றே;

பரிகாசம் பகடி செய்து நகையாட எனக்கே  

அருகேயோர் அசடுவழி ஆளொருவன் உனைப்போல்

 வாய்க்காது வா"வென்றேன்; 
வந்தவழி பார்த்துப் 

பாய்ந்தானோ பறந்தானோ பதில்சொல்லக் காணேனே.


             121