பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தியாகம்

   பல ஆண்டுகளாக காட்டிலே மழை பெய்யவில்லை. குடிக்கக் கூடத் தண்ணீர் அற்றுப்போய் விட்டது. மக்களெல்லாம் வாடினர். அவர்களுடைய துன்பங்கண்டு ஆரசன் உள்ளம் பதைத்தான். குடிதண்ணீருக்காகவது வகைசெய்ய வேண்டுமென்று பெரிய கிணறொன்று வெட்டினான். எவ்வளவு ஆழம் வெட்டியும் கிணற்றில் ஊற்றே வரவில்லை. அரசனுடைய வருத்தம் கரை கடந்துவிட்டது. அந்த நிலையிலே பாட்டுத் தொடங்குகிறது. இப்பாடல் அஸ்ஸாமியக் கதை யொன்றைத் தழுவி உருவாகியுள்ளது .
   

மாரி பொழிய வில்லை-வெட்டும்
 மாபெருங் கேணியிலும்
 நீரினைக் காணே னந்தோ-என்றன்
 நெஞ்சங் குமுறு கின்றேன்.
 
 நீதி தவறினனோ-அன்றி
 நேர்மை குலைந்தேனோ?
 ஏது பிழை யறியேன்-மக்கள்
 இடரில் அழுந்தினரே.”
 
 என்றெண்ணி மன்னவனும்-துயர்
 ஏறி உறங்கிடுங் கால்
 கண்ட கொடுங் கனவை-
 அவன் காதலிக்கே யுரைப் பான்;
 
 நாகினி தேவிக்குன-பலி
 நல்கிடின் நீர் பெருகி
 வேகமாய் ஊறிடுமாம்-இது
 விண்ணவர் தம் முடிவாம்.'

          125