பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீரன் குமரன்


அந்நியர் ஆட்சிதன் கைத்தடி-அதன்
ஆணையால் நின்றதென் றெண்ணியே
முன்னணி தன்னிற் கொடியுடன் வரும்
மொய்ம்புடை வீரன் குமரனை
        
 மண்டையி லோங்கி யடித்தனன்-அந்த
மண்டையில் மூளையில் லாதவன் ;
 கண்டவர் உள்ளம் கொதித்தது-வீரன்
"காந்திக்கு ஜே" யென்று கூவினான்.
      
சாந்த முனிபெயர் கேட்டதும்-மக்கள்
சற்றுத் தணிந்தனர் கோபத்தீ ;
"காந்தியின் ஆணையை மீறிடோம்-பகைக்
கைத்தடி தன்னையும் சீறிடோம்”
      
என்று குமரன் இசைத்திட்டான்-அவன்
     இன்மொழி வாய்மேல் அடித்தனன்.
 குன்றுபோல் நின்றந்த வீர்னும்-ஜய
     கோஷத்தை மேலும் முழக்கினன்.

 மார்பிலும் கையிலும் காலிலும்-தாசன்
      மாறி யடித்தனன் வேகமாய்;
 பார்வை கலங்கிற்றப் போதிலும்-வீரன்
      "பாரத பூமிக்கு ஜே' யென்றான்.

 மிருக பலமொரு பக்கமாம்-ஆன்ம
     மேன்மைப் பலமொரு பக்கமாம் ;
 தரும பலமொரு மக்கமாம்-கொடுந்
     தடியின் பலமொரு பக்கமாம்.

130