பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கிழவியும் ராணாவும்

“நாதன் வீழ்ந்தபின் நால்வரென் காளைகள் நடுகல் பெற்றிடும் வீரராய்ப் போரினில்
மோதி மாண்டனர்; தன்னந் தனியளாய் முற்றும் நும்புகழ் கூறிநான் வாழ்ந்துளேன்.

“ஈனப் பேச்சுநீர் பேசிடல் ஏன்?" என்றாள்: “என்ன செய்வ"தென் றேபிர தாபனும்
மோன மாய்த்தலை அங்கையில் சேர்த்துமே முன்னர் கொண்ட முடிவினையே சொன்னான்.

நரம்பெ ழுந்துவ லியற்ற கையினள்
நாக மென்னவே சீறி எழுந்தனள்.
அருகில் தொங்கிய வாளை எடுத்தனள்
“அத்த, கேளிந்தச் சோர்வு பொறுக்கிலேன்.

“வீர மங்கையர் கோடியிங் கேயுளார்
வெல்லும் வீரரைப் பெற்றுத் தருவர்காண்;
பார தப்பெயர் மங்கிடா தோங்கவும்,
பார் மதிக்கும் ரஜபுத்ர வீரந்தான்

“கறை யிலாதொளி வீசவும் நீரின்றே
கடுகச் சென்றுபோர் மீண்டும் இயற்றுவீர்: மறையு மென்றன்பே ராணை யறிகுவீர்
மார்பு சேர்செங் குருதியால் செப்பினேன்"

என்று வாளைத்தன் மார்பில் புதைத்தனள், இரத்தம் சோரிட வாயில்முன் சாய்ந்தனள், நின்ற வீரன் திகைத்துப் புதியதோர் நிச்சயத்துடன் கட்டுரை கூறுவான்:-

135