பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும் பதினறு உலகங்கள் தோன்றுவதும் மறைவதுமாகிய படைப்புத் தத்துவத்தைப் புது முறையில் கூறுவது இக்கவிதை. இதற்குச் சற்று நீண்ட விளக்கம் தேவை. இருப்பினும் குறிப்பாகவும் சுருக்கமாகவுமே இங்கு எழுத இயலும், நீலத்துப் பாழ் - நீல நிறமான பாழ்வெளி. கோளத்துப் பம்பரங்கள் - கோளங்களாகிய பம்பரங்கள். பம்பரம் கிலேயில் கின்று வேகமாகச் சுழல்வதைப் பம்பரம் துரங்குகிறது என்று கூறுவார்கள். அங்தச் சமயத்திலே அதிலிருந்து ஒர் ஒலி எழும். தூங்காத ஆட்டத்தான் - தோற்றம் மறைவு என்கிற நடனம் ஓயாது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இங்த நடனத்தின் பவனியிலே வாண வேடிக்கைகளும் உண்டு. கிரகங்களும் கட்சத்திரங்களும் பொறிபொறியாய் உதிர்கின்றன. நீளத்து நெடுவழியோ நீள்வட்டப் பொய் வழியோ . ஆகாயப் பரவெளியானது நீண்டு போய்க்கொண்டே இருக் கிறதா அல்லது மீள்வட்டமாக அமைந்துள்ளதா ? இங்த இரு வகையான கருத்துக்களும் வானவியல் விஞ்ஞானிகளிடையே உலவி வருகின்றன. மணிக்கூண்டு என்பது காலக் கணக்கைக் குறிக்கிறது. பூ கின்று பிறப்பித்துப் பால் உறங்கி வாழ்வித்து - தாமரை மலரோளுகிய பிரமாவாக கின்று படைத்தும், திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டு வாழ்வித்தும். தாளம் தவறடித்து - கோளங்களின் போக்கிலே ஓர் ஒழுங் குண்டு. அந்த ஒழுங்கு தவறுமானல் ஒன்ருெடொன்று மோதிச் சிதறும். - புன்னகையில் சினங்காட்டி - கிரிப்பும் கோபமும் கலந்தே இருக்கின்றன. 150