பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளந்தமிழா


இளந்தமிழா எழுந்திரடா !
இன்பமெலாம் கொணர்ந்திடுவாய்
வளம்பெருக்கித் தமிழ்நாட்டை
வானாடாய்ச் செய்திடுவாய்.

காதல்அறம் வீரமெலாம்
களித்திருந்த மண்ணிதிலே
பேதமையும் ஏழமையும்
பிழைத்திருக்க விடலாமோ?

குறிஞ்சிமணம் பாரிகொடை
கொல்புலியின் கொடிஇமயம்
பொறித்திடுமோர் தனிவீரம்
போகவிட்டு வாழ்வாயோ ?

வள்ளுவனும் கம்பனுமே
வளர்த்தசுவைத் தீந்தமிழின்
தெள்ளமுதம் கொண்டவன்நீ
சீர்குலையக் காரணமேன்?

கச்சைகட்டி மார்தட்டிக்
கண்களிலே ஒளிவீசத்
துச்சமெனப் பயந்தள்ளித்
துணிவுடனே புறப்படுவாய்.

17