பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமரக் கன்னி கன்னற் சுவைதெவிட்டக் கனியின்பம் தருதருவே! ஆண்டுதொறும் எழிலிளமை அடைகின்ற - தந்திரத்தை சண்டெனக்குக் கூருயோ? இதயம்நிறை காதலதோ? இளவேனில் வரவு கண்டு மாமரம் புதிய எழில் கொள்ளத் தொடங்குகிறது. அந்தச் சமயத்திலே மாமரத்தைப் பார்ப்பதே ஓர் இன்பமாக அமைகிறது. வசந்த சகன் - வசந்தனுடைய தோழன், மன்மதன். மலையத்தே பெற்று வந்த தென்றல் தேர் - பொதிய மலையில் பெற்ற தென்றலாகிய தேர். மன்மதனுக்குத் தேர் தென்றல். வெள்ளோட்டம் - சோதனைக்காகத் தேரை முதன் முதலாக ஓடவிடுதல். சென்று வங்த குயிற் பாணன் - மாரிக்காலத்திலே குயில் மறைந்து விடுகிறது; இளவேனிற் காலத்திலே மறுபடியும் அதன் இனிய குரல் கேட்கிறது. குயிலாகிய பாணன். ஆண்டுதொறும் எழிலிளமை அடைகின்ற தங்திரம்மாமரமே, நீ ஆண்டுதோறும் புதிய இளமை பெறுகிருய்; கான் ஆண்டுதோறும் முதுமை எய்திக்கொண்டே இருக்கிறேன். இளமை எய்தும் தந்திரத்தை எனக்குக் கூறமாட்டாயா? இதயத்திலே அன்பு கிறைகின்றபோது இளமையும் தானகவே தேன்றிவிடுமா? i55