பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளங்தமிழா



வாழ்க்கையிலே சமத்துவமும்
மனத்தினிலே உயர்நோக்கும்
மாட்சிமிகும் அறநெறியும்
ஆட்சிசெயப் போரிடுவாய்.

அனைவருக்கும் பொதுஉரிமை
அனைவருக்கும் பொதுநீதி
அனைவருக்கும் பொதுஉடைமை
ஆக்கிடவே தோள் புடைப்பாய்.

மக்களெலாம் ஓர்குலமாம்
மாநிலமே ஒருவீடாம்
தக்கநெறி இதுகண்ட
தமிழன்நீ மறவாதே.

இளந்தமிழா எழுந்திரடா !
இன்பமெலாம் கொணர்ந்திடுவாய்
வளம்பெருக்கி வையகத்தை
வானாடாய்ச் செய்திடுவாய்,

குறிஞ்சி மணம்-மலையும் மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்திற்கு உரியதாகக் கூறப்படும் காதல் மணம்,

பாரிகொடை-பாரி என்னும் வள்ளலின் கொடைத்திறமை புகழ்பெற்றது.

மக்களெலாம் ஓர் குலமாம் மாநிலமே ஒரு வீடாம்-யாதும் ஊரே, யாவரும் கேளிர் .

18