பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈசல் இரவுப் பொழுதெல்லாம் தூறல் விழுந்திட ஈசல் பறந்தது காலேயிலே பூசல் சிறந்தது சோலையிலே கரவுக் குணமுள்ள பச்சைக் குருவியும் காற்றில் மிதந்து பிடித்ததடா கூற்றில் முனைந்து மடித்ததடா தந்திரத் தங்கொரு வல்லுறுப் பட்சியும் தக்கதோர் வாய்ப்பினைக் கண்டதடா மிக்கதோர் ஏய்ப்பினைக் கொண்டதடா அந்தரத் தீசல்மேல் நாட்டம் முழுதுமாய் ஆடி அலைந்தது சிட்டுப்பச்சை ஒடி மலேந்தது துட்டப்பச்சை ஈச லைக் கவ்வவான் நின்ற கணத்தினில் ஈட்டியாய்ப் பாய்ந்தது வல்லூறு சூட்டியாய்த் தோய்ந்தது கொல்லுறு ஈசன் விதித்ததோர் ஆணையிங்கே கண்டேன் எல்லா உயிருக்கும் அன்புசெய்வாய் பொல்லா உயிருக்கும் இன்புசெய்வாய். ஐப்பசி மாதம் ஆடைடிழைத் காலும், அம்மாதத்திலே ஒரு நாள் காலையில் கழனிகளின் வழியே செல்லுயபோது ஏற்பட்ட நிகழ்ச்சி இக் கவிதைக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. 16&