பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தி அண்ணல் சாந்தத்தின் மூர்த்தியைக் கண்டோம்-எங்கள் காந்தியாம் அண்ணலைக் கண்டோம் கண்டோ, மாந்தரில் மாணிக்கம் கண்டோம்-இந்த மாநிலம் போற்றும் மகாத்மாவைக் கண்டோம் (சாந்தத்தின்) புத்தனும் இயேசுவும் போன்ருன்-எங்கள் பொன்முடி இமயத்துப் புனிதனும் போன்முன் உத்தம அன்பும் அருளும்-அவை ஒர்வடி வாகவே வந்தவன் காந்தி (சாந்தத்தின்) ஆர்செய்த நற்பெருந் தவமோ-இந்த அண்ணலை நம்மிடைக்கண்டதோர் பாக்யம், பார்செய்த புண்ணியம் என:ோம்-நேரில் பார்த்திரு கண்பெற்ற பேறையும் பெற்ருேம் (சாந்தத்தின்) பாரத நாட்டுக்குத் தந்தை-அதன் பண்பின் வடிவமாய் வந்தவன் காந்தி சாரதி கண்ணன்போல் வந்தான்-கையில் சக்கரம் ராட்டையே கொண்டறம் நல்கினன் (சாந்தத்தின்) 169